Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    104.சரணகமலாலயத்தை


    சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
    தவமுறைதி யானம் வைக்க அறியாத
    சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
    தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
    கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
    கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
    கமழுமண மார்க டப்ப மணிவோனே
    தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
    சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு
    தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
    தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
    அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
    அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
    அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
    அழகதிரு வேர கத்தின் முருகோனே.



    - 104 திருவேரகம்



    தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய
    சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு


    தருணம் இது ஐயா = தக்க சமயம் இது ஐயா மிகுத்த = மிக்க கனம் அது உறு = பெருமையைத் தரும் நீள் சவுக்ய = நீடித்த சுகம் சகல செல்வம் = எல்லா விதமான செல்வம் யோகம் மிக்க = அதிட்டம் நிறைந்த பெரு வாழ்வு = பெரு வாழ்வு.


    தகைமை சிவ ஞான முத்தி பர கதியு(ம்) நீ கொடுத்து
    உதவி புரிய வேணும் நெய்த்த வடி வேலா


    தகைமை = நன் மதிப்பு சிவ ஞானம் = சிவஞானம் முத்தி பர கதியும் = முத்தியாகிய மேலான நிலை (இவைகளை) நீ கொடுத்து = நீ எனக்குக் கொடுத்து உதவி புரிய வேணும் = உதவி செய்ய வேண்டும் நெய்த்த = கூரிய. வடிவேலா = வடிவேலனே.


    அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
    அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா


    அருண தள பாத பத்மம் அது = சிவந்த தாமரை போன்ற பாதத்தை. நிதமுமே துதிக்க = தினமும் துதிப்பதற்கு. அரிய தமிழ் தான் அளித்த = அருமையான தமிழ் ஞானத்தைத் தந்த. மயில் வீரா = மயில் வீரனே.


    அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த
    அழக திருவேரகத்தின் முருகோனே.


    அதிசயம் அநேகம் உற்ற = பல அதிசயக் கோலங்கள் நிறைந்த.பழநி மலை மீது உதித்த = பழனி மலை மீது விளங்கித் தோன்றிய. அழக = அழகனே. திருவேரகத்தின் முருகோனே =சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே.


    சரண கமல ஆலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில்
    தவம் முறை தியானம் வைக்க அறியாத


    சரண கமல ஆலயத்தை = உனது தாமரை போன்ற திருவடிக் கோயிலை அரை நிமிஷ நேரம் மட்டில் = அரை நிமிட நேர அளவுக்காவது தவம் முறை = (மனதை ஒரு முகப்படுத்தித்) தவ முறையில் தியானம் வைக்க அறியாத = சிந்தனை செய்யத் தெரியாத.


    சட(ம்) கசட(ம்) மூட மட்டி பவ வினையிலே சனித்த
    தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ


    சடம் கசடம் மூட மட்ட = பொய்யும், குற்றமும் கொண்ட மூடன்,மட்டி. பவ வினையிலே = பிறப்பதே தொழிலாகக் கொண்டுசனித்த தமியன் = பிறப்பெடுத்த அடியவன் மிடியால் = வறுமை யால் மயக்கம் உறுவேனோ = மயக்கம் அடையலாமா?


    கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு
    கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே


    கருணை புரியாது இருப்பது = (என் மீது நீ) கருணை புரியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என குறை = என்ன குறையைக் கண்டு? இவ் வேளை செப்பு= இப்பொழுதே சொல்லி அருள்வாயாக கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே = கயிலை மலை நாதராகிய சிவபெருமான் பெற்ற குமரனே.


    கடக புய(ம்) மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை
    கமழு(ம்) மணம் ஆர் கடப்பம் அணிவோனே


    கடக புய மீது = வீர கங்கணம் அணிந்த திருப்புயத்தின் மேல்இரத்தின மணி அணி = இரத்தின ஆபரணங்களையும் பொன் மாலை = பொன்னாலாகிய மலையையும் செச்சை = வெட்சி மாலையையும் கமழும் மணம் ஆர் கடப்பம் = மணம் வீசும் வாசனை நிறைந்த கடப்ப மாலையையும் அணிவோனே =அணிபவனே.



    உதவி புரிய வேணும்





  • #2
    Re: திருப்புகழ்அம்ருதம்

    Very nice.for the sake of bhaktas kaumaram site post guruji raghavan s singing of thirupugazh.

    Comment

    Working...
    X