103.குமரகுருபர
குமரகுருபர முருக சரவண
குகசண் முககரி பிறகான
குழக சிவசுத சிவாய நமவென
குரவ னருள்குரு மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவலுல மறைபுகழ் பெருமாளே.
-103 திருவேரகம்
அடைப்புக்குறி [ ] க்குள் இருப்பன நடராஜன் கொடுக்கும் விளக்கம்

சுருக்க உரை
குமரனே. குருபரனே. முருகனே. சரவணனே, குகனே. கணபதிக்குப் பின் தோன்றிய இளையவனே. சிவ குமாரனே. சிவாய நம என்னும் ஐந்தெழுத்துக்கு உரிய சிவபெருமானுடைய மகனே. அமுதத்தைக் கடைந்த தேவர்கள் எழுப்பிய கடல் ஒலியோ என்று சொல்லும்படி அடியவர்கள், தமது வினைகள் ஒழிய, அபயக் குரல் இடுவதை நீ அறியாயோ?
ஏழு கடல்களும், உலகங்களும் அழிபட, போருக்கு வந்த சூரர்களுடைய உயிரைக் கவர்ந்த வீரனே. காலனின் உயிரைக் கொண்டு போன திருவடியை உடையவரும், கங்கைச் சடையில் கொண்டவருமாகிய சிவபெருமானுக்குக் குருவே. குருமலையாகிய சுவாமி மலையில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. அடியார்களின் அபயக் குரலை நீ அறிய மாட்டாயோ?
அடை மொழி இன்றி முருகவேளின் ஆறு திரு நாமங்கள்
வரும் பாடல்.

ஒப்புக
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் ......... . அநுபூதி
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் ......... . அநுபூதி