101.கறைபடும்
கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித் தனலூதிக்
கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா
குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற் றுணர்வேனோ
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
புயலுடன டங்க வேபிழைத்
திமையவர்கள் தங்க ளூர்புகச் சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள நந்த சூடிகைத் திருமாலும்
பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப் பெருமாளே.
-101 சுவாமிமலை
கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித் தனலூதிக்
கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா
குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற் றுணர்வேனோ
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
புயலுடன டங்க வேபிழைத்
திமையவர்கள் தங்க ளூர்புகச் சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள நந்த சூடிகைத் திருமாலும்
பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப் பெருமாளே.
-101 சுவாமிமலை
சுருக்க உரை
நிலையற்ற உடம்பை நிலைபெறச் செய்ய விரும்பி, உள் இழுக்கும் வாயுவைப் பல மந்திரங்களால் தடை செய்து, மூலாக்கினியை எழுப்பி,யோக மார்க்கங்கள் செய்யும் சிந்தனையை அகற்றி, நான் ஐம்புலன்களை அடக்கி, மவுனம் பூண்டு, செயல்கள் அற, உய்வு பெற,சுவாமி மலையில் வீற்றிருக்கும் ஞான குரு நாதனே. உன் தாமரைத் திருவடிகளில் சரணம் அடைந்து, சிந்தையை நிறுத்தி, உன்னைச் சிந்தித்து உணர்வேனோ? தேவர்களும் இந்திரனும் பொன்னுலகில் புக, சூரனுடன் போர் புரிந்து, திருமாலும், சிவ பெருமானும் இரங்கி வேண்ட, ஆணவத்துடன் நின்ற பிரமனைச் சிறையில் இட்டு,சூரனுடன் போரிட்ட, தேவ சேனையின் கணவனே, உன் திருவடித் தாமரைகளை நான் அடைவேனோ.

ஒப்புக
திருவடியை உணர வேண்டுதல்
யோக கற்பனை மருவு சிந்தை....
அசட்டு யோகத்தை அருணகிரியார் பல இடங்களில் கண்டிக்கிறார்.
காட்டிற் குறத்தி பிரான் பதத்தேகருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி விழிவைத்து
மூட்டிக் கபாலிமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே --- கந்தர் அலங்காரம்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் மலமாயை --- திருப்புகழ்,அனித்தமான
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி மீதி லோயாது தடுமாறும் ---- திருப்புகழ்,அடைபடாது