98.கடாவினிடை
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் புலனோடுஞ்
சுபானுமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் பெருமாளே.
-98 திருவேரகம்
சதா உன் புகழ் ஓத அருள், முருகா!
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் புலனோடுஞ்
சுபானுமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் பெருமாளே.
-98 திருவேரகம்
சதா உன் புகழ் ஓத அருள், முருகா!
சுருக்க உரை
எருமையின் மீது ஏறும் யமனால் தூண்டப்பட்ட தூதர்கள் தவறாத வழியில் வருவது போலவும், கனவில் விளையாடும் கதை போலவும்,யாருக்கும் ஈயாமல் சேர்த்து வைத்த பொருள் போலவும், இந்த உலகில் நிலைத்து இருக்க முடியாத வண்ணம் உயிரைக் கவர்ந்து போகும் சுகம் தான் இந்த நிலையற்ற வாழ்க்கை என்று உணர்ந்து, எப்போதும் உன்னை ஓதும்படி கண் பார்த்து அருள்க.
காளியுடன் நாளும் நடனம் இடுகின்ற சிவபெருமானின் பெருவாழ்வே. துர்க்குணம் கொண்ட சூரனின் அலங்கார வாழ்வு அழியும்படி வேலை எய்தவனே. நீண்ட நேரம் ஓடுகின்ற மூச்சியையும், ஐம்புலன்களையும் அடக்க வல்ல ஞான தவசிகள் சேர்கின்ற சுவாமி மலையில் வாழும் பெருமாளே. உன்னை ஓதும்படி பாராய்.

ஒப்புக
1 தொடாது நெடுதூரம்.......ஞானந் தபோதனர்கள் சேரும்....
....நேர் அண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல்
சாதிக்கும் யோகிகளே --- கந்தர் அலங்காரம்
2 கடாவினிடை வீரம் கெடாமல்......
தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்புமுளகதக் கடமாமேல்
---- திருப்புகழ், தமரகுரங்குளு
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் கொடுபோகக்) ------ - ----- திருப்புகழ், காலனார்
சுவை யொளியூ றோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு --- திருக்குறள்
3. இன்மொழியால் இன்று யான் உனை ஓதும்படி பாராய்....
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாத நாமம் நமச்சிவாயவே --- சம்பந்தர் தேவாரம்
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே
– திருப்புகழ், கோலகுங்கும்1 தொடாது நெடுதூரம்.......ஞானந் தபோதனர்கள் சேரும்....
....நேர் அண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல்
சாதிக்கும் யோகிகளே --- கந்தர் அலங்காரம்
2 கடாவினிடை வீரம் கெடாமல்......
தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்புமுளகதக் கடமாமேல்
---- திருப்புகழ், தமரகுரங்குளு
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் கொடுபோகக்) ------ - ----- திருப்புகழ், காலனார்
சுவை யொளியூ றோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு --- திருக்குறள்
3. இன்மொழியால் இன்று யான் உனை ஓதும்படி பாராய்....
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாத நாமம் நமச்சிவாயவே --- சம்பந்தர் தேவாரம்
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே
பிடாரி – பட்டரிகா என்ற சகஸ்ரநாமம் மருவி பிடாரி ஆனது
ஸ்ரீதேவீ கட்கமாலா' என்னும் மந்திர நாமாவளியில்
'ஸ்ரீபராபட்டாரிகா' 'ஸ்ரீபராபராபட்டாரிகா' என்று சொல்லப்படுகிறது. 'பட்டாரிகை' என்னும் சொல் சக்கரவர்த்தினியைக் குறிக்கும்.
ஸ்ரீதேவீ கட்கமாலா' என்னும் மந்திர நாமாவளியில்
'ஸ்ரீபராபட்டாரிகா' 'ஸ்ரீபராபராபட்டாரிகா' என்று சொல்லப்படுகிறது. 'பட்டாரிகை' என்னும் சொல் சக்கரவர்த்தினியைக் குறிக்கும்.