97.ஒருவரையுமொருவர்
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளிது என்றுஎன்
செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் டருமாமென்
கருணைபொழி கமலமுகமாறு மிந்துளந்
தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
திகழருண கிரிசொருப னாதி யந்தமங் கறியாத
சிவயநம நமசிவ கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
திருவுருவன் மகிழெனது தாய்ப யந்திடும் புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் பெருமாளே.
- 97 திருவேரகம்

சுருக்க உரை
விலை மாதர் வீட்டைத் தேடி ஒருவர் போவது ஒருவருக்கத் தெரியாத வண்ணம் சென்று திரிந்து, துன்பமும் கலக்கமும் அடைந்து திரிகின்றவனும், மரப் பொம்மை போலக் கயிறால் ஆட்டி வைக்கப்பட்டு ஆடுபவனும் ஆகிய என்னையும் உன் அடியார்களுள் ஒருவனாகக் கருதி என் பிறப்புகளையும் மும்மமலங்களையும் நீக்கி,என்னை அருள மயிலின் மீது ஏறி வந்து ஆண்டருள்க.
முப்புரங்களையும் மதனையும் எரித்த சிவபெருமான் இடது பாகத்தில் உறையும் உமா தேவி பயந்த மகனே, கோழிக் கொடியுடன் மயில் மீது ஏறி வந்து எண்ணலா வேதங்கள், குமரு குரு என்று ஓலமிட, ஆதி சேடன் அஞ்ச வருபவனே, வள்ளியுடன் தெய்வயானை உடன் கலந்த பெருமாளே. சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, என்னை ஆண்டருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்
1.மர பாவை துன்றிடும்....
ஐயா மரப்பாவை ஆடுவதும் சூத்திரிதன்
கைவாசி யோபாவை கற்றதோ - வெய்யவினை
என்னிச்சை யோஅருணை ஈசா படைத்தளிக்கும்
உன்னிச்சை அன்றோ உரை ---- அருணகிரி அந்தாதி.
2. சிவாய நம - நமசிவாய....
சிவாய நம என்பது சூக்கும ஐந்தெழுத்து. நம சிவாய - ஸ்தூல ஐந்தெழுத்து பஞ்சாட்சரம்.
சிவாய சிவ என்பது காரண ஐந்தெழுத்து. சிவாய நம என்பது முத்தி ஐந்தெழுத்து