96.எந்தத் திகை
எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே
சந்தித் தரஹுர சிவசிவ சரணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற
சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தத் சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.
-96 திருவேரகம்

சுருக்க உரை
உலகில் உள்ள எந்த வகையான உயிர் சேர் பிறவிகளிலும் நான் உழன்று திரியாமல், உன் தாமரைத் திருவடிகளில் மலர் கொண்டு,வேத முறைப்படி சந்தித்து, அரகர, சிவ சிவ, சரணம் என்று வழிபட,அழகிய தேவசேனை முன்னம் நடனம் புரிய, உனது திருவடி அழகுடன் பொலிய, இந்தச் சபையில் எனது உள்ளம் உருக வந்து அருள்வாயாக.
பல வகை முரசு வாத்தியங்கள் முழங்க, தேவர்கள் பூக்களைச் சொரிய,அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே,சிவபெருமானுக்கும், உமைக்கும் குழந்தையே, திருமாலின் மருகனே,சபை தனில் எனது உள்ளம் உருக வருவாயே.

ஒப்புக:
1 உயிரியை பிறவி...
உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் ---சம்பந்தர் தேவாரம்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.....எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமானே -------------------------------- திருவாசகம்
2. சந்தச் சபைதனில்...
பிரபுட தேவனிடம், சம்பந்தாண்டான் வாதம் நிகழ்ந்த போது, தாம் கொடுத்த வாக்கின் படி, அருணகிரியார் சபையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளிய பாடல்.
3. சம்பைக் கொடி....
சம்பைக்கொடியிடை ரம்பைக்கரசி யெனும்பற் றருமகள்--- திருப்புகழ்,விந்துப் புளகித

குருதி பாய என்பது அருமையான பத பிரயோகம். பிரபுட தேவராஜன் சபையில் சம்பந்தாண்டவனுடன் வாட்யம் செய்தபொழுது முருகனை சபையில் வரவைக்க பாடின பாடல்