91.வாதம் பித்தம்
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்க்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவ்வி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே.
-91 பழநி
அடியாரோடு சேர்வதற்கான துதி

சுருக்க உரை
வாதம், பித்தம் இவைகலால் வரும் பிணிகளும், க்ஷயரோக வகைகளும், கோழையால் வரும் இழுப்பு முதலிய நோய்களும் என்னை வாட்டுவதுடன், தொண்ணூற்றாறு தத்துவங்களில் வாழ்கின்ற ஐம்புலன்களால் ஏற்படும் மூவாசைகளால் பீடிக்கப்பட்டு, எந்த நல்ல பொருளையும் உணராமல், மாயையால் விளையும் பொய்ம்மையால் மூடப்பட்ட இந்த உடலே சுகம் எனக் கருதி, அதை மிகவும் போற்றி, நல்ல ஆடையாலும், பொன் ஆபரணங்களாலும் அலங்கரித்து, மகிழ்ந்து, ஏழு உலகங்களும் எனக்குப் பிற்படும் படி, முன்னே ஓடும் மூடனாகிய நான் தூய அடியார்களின் திருவடிகளைச் சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவடியைத் தந்து அருளுக.
ஆதி சேடன் மயங்கவும், கடலும் அண்ட கோளங்களும் அஞ்சவும், அசுரர்கள் வாழ்ந்த மலைகளும் தீவுகளும் பொடிபட, நெருப்பு வேலைச் செலுத்திய மயில் வீரனே, பிரமன் தலையில் குட்டி, ஈசனுக்குக் குருவாய் அமைந்து, அவர் காதில் பிரணவப் பொருளை உபதேசித்த முருகனே, பல வேடங்களைப் பூண்டு வள்ளி நாயகியின் மீது மோகம் கொண்டு, அவள் வாழ்ந்த தினைப் புனத்துக்குப் போய், அவளை மணந்து, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, என்னை அடியாருடன் சேர்த்து அருள் புரிவாயாக.