90.வரதாமணி
வரதா மணிநீ யெனவோரில்
வருகா தெதுதா னதில்வாரா
திரதா திகளால் நவலோக
மிடவே கரியா மிதிலேது
சரதா மறையோ தயன்மாலும்
சகலா கமநூ லறியாத
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே.
- 90 பழநி
துதித்தால் வரும் பேறு இத்திருப்புகழில் சொல்லப்படுகிறது

சுருக்க உரை
வேண்டுவோர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவனே. கண்மணியே. உன்னைத் துதித்து, ஆராய்ந்து பார்த்தால் கை கூடாதது என்ன?
இரசவாதம் முதலியவைகளால் நவ லோகங்களையும் இட்டு கூட்டுவதால் வரும் பயன் என்ன? ஒன்றுமில்லை.
மெய்யனே, வேதம் ஓதும் பிரமனும், திருமாலும், சகல ஆகமங்களும், ஞான நூல்களும் கண்டறியாத பர தேவதையாகிய பார்வதி அருளிய குழந்தையே, பழனி நகரில் வாழும் பெருமாளே, உன்னைத் துதித்தால் வராதது என்ன?

விளக்கக் குறிப்புகள்
அ. வருகா தெதுதா னதில் வாராது....
வருகா(த)து எது? எது தான் அதில் வராது? எனப் பிரிக்கவும்.
ஆ. ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்.
இ. நவ லோகங்கள்.... பொன், செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா(கலப்பு உலோகம்) , துத்தநாகம், வெண்கலம்.