Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    89.வசனமிக
    வசனமிக வேற்றி மறவாதே
    மனதுதுய ராற்றி லுழலாதே
    இசைபயில்ஷ டாக்ஷ ரமதாலே
    இகபரசெள பாக்ய மருள்வாயே
    பசுபதிசி வாக்ய முணர்வோனே
    பழநிமலைவீற்ற ருளும்வேலா
    அசுரர்கிளை வாட்டி மிகவாழ
    அமரர் சிறை மீட்ட பெருமாளே

    -89 பழநி


    இகபர சௌபாக்கியம் பெற இத்திருப்புகழழை ஓதலாம்


    பதம் பிரித்து உரை


    வசனம் மிக ஏற்றி மறவாதே
    மனது துயர் ஆற்றில் உழலாதே


    வசனம் மிக ஏற்றி = உருவேற ஏற செபித்து மறவாதே =(அங்ஙனம் செபித்தால்) உன்னை மறவாமல் இருக்கவும்மனது துயர் ஆற்றில் = மனம் துயரம் தருகின்ற வழிகளில்உழலாதே = திரியாது இருக்கவும்.


    இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே
    இகபர செளக்யம் அருள்வாயே


    இசை பயில் = சொல்லிச் சொல்லிப் பயில்கின்றஷடாக்ஷரம் அதாலே = ஆறேழுத்து மந்திரத்தால் இகபர செளபாக்யம் அருள்வாயே = இம்மை மறுமைச் சுகங்களை(நல்வாழ்வை) அடியேனுக்கு அருள் புரிவாயாக.


    பசு பதி சிவாக்யம் உனர்வோனே
    பழநி மலை வீற்று அருளும் வேலா


    பசு பதி = சிவபெருமானுடைய சிவாக்யம் = வேத சிவாகமங்களை. உண்ர்ந்தவனே = அறிந்தவனே பழநி மலை வீற்று அருளும் = பழனி மலையில் வீற்றிருந்து அருள் புரியும். வேலா = வேலனே.


    அசுரர் கிளை வாட்டி மிக வாழ
    அமரர் சிறை மீட்ட பெருமாளே.


    அசுரர் கிளை வாட்டி = அசுரர் கூட்டங்களை ஒடுக்கியும் மிக வாழ = நன்றாக வாழுமாறு அமரர் சிறை மீட்ட =தேவர்களைச் சிறையினின்றும் மீட்டும் (அருளிய)பெருமாளே = பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்
    ஷடாக்ஷரம் – ‘சடக்ஷரம்’ என்று சொல்லப்படும் ஆறெழுத்து மந்திரம். ‘நமோ குமாராய’ என்பதே ஆறெழுத்து மந்திரம் என்பார் திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய நச்சினார்கினியர். ‘சரவண பவ’ என்பதே அந்த மந்திரம் என்று சிலர் கூறுவர். ‘குமாராயநம’ என்றும் சிலர் கூறுவர். ‘பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள்தாக நவில் சரவண பவ’ ( சுருதி முடி – பழநி திருப்புகழ்) என்று அருணகிரியார் கூறியிருப்பதிலிருந்து அவர் எண்ணத்தில் இதுவே ஷடாக்ஷரம்என்பது எங்கள் கருத்து.


    வசனம் ஏற்று....
    உருவேறச் செபித்தல் = உருப்போடுகின்ற எண்ணிக்கை நிரம்ப ஆகும்படிச் செபம் செய்தல்.
    உருவேற வேஜெபித்து வொருகோடி யோம சித்தி
    யுடனாக ஆகமத்து கந்து பேணி .............. திருப்புகழ், உருவேறவே.


    இ. பசுபதி வாக்யம் = வேத சிவ ஆகமங்கள்.
Working...
X