88.மூல மந்திரம்
[மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக என்றொரு பேரு முண்டருள் பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
-88 பழநி
[மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக என்றொரு பேரு முண்டருள் பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
-88 பழநி
சுருக்க உரை
நான் மூல மந்திரமாகிய ஆறெழுத்தை ஓதுவது கிடையாது. ஒருவருக்கும் ஈகை செய்வதில்லை. மனத்தில் அன்பும் இல்லை. மவுனமோ, ஞானமோ எனக்குக் கிடையாது. ஆனால் மாதர்கள் மீது மோகம் எனக்கு மிக உண்டு. அபசாரம் மிகச் செய்தவன் நான். எல்லாரும் என்னைக் கீழ்மகன் என்று சொல்லுவதும் சரியே. குணக் கேடர்கள் போகும் கும்பி நரகத்தில் விழுவதற்கே நினைவு கொண்டு, இந்த உடலைச் சுமந்து கொண்டு திரியும் என் மேல் அன்பு வைத்து, இனி என்னை ஆள வந்து அருள் புரிவாயாக.
மயில் பீலியும், தாம் ஏந்திய குண்டிகை நீரும், அசோகந் தளிர்களும் வெந்து, அந்த அவமானத்தால் சமணர்களாகிய ஊமைகள் பயம் கொள்ளுமாறு, சம்பந்தராக வந்து, வாது செய்து, பாசுரங்கள் எழுதிய ஏடுகள் வைகை ஆற்றில் எதிர் ஏற, பாண்டிய மன்னனின் சுரமும், கூனும் நீங்கவும், சமணர்கள் கழு ஏறவும் வெற்றி கொண்ட முருகனே. நஞ்சை உண்ட சிவபெருமான் பாகத்தில் உறையும் சங்கரியின் குமாரனே. வேதங்கள் போற்றும் ஞான குருவே. சேவல் கொடியோனே. பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. ஞானம் நிறைந்த அடியார்களுடன் நான் சேர்ந்து நன்னெறியில் ஒழுக அருள் புரிவாயாக.

குகஸ்ரீ ரசபதி விளக்கவுரை
அமணர் காடு காழியை அடர்ந்தது. அப்பாவத்தால் பாண்டியனை அந்நோய் பாதித்தது. அதைத் தவிர்க் அமணர் எண்ணினர். மந்திரம் கூறி மயிற் பீலியால் மன்னர் உடலை வருடினர். தேகத்தின் மீது கும்பிகை நீரைத் தெளித்தனர். சுர வெம்மையால் சார்ந்த பீலி சாமம்பலாகியது. வளமான கும்பிகை நீர் வற்றியது. கையில் இருந்த அசோக தளிரும் தீந்தது. இறுதியில் திருநீற்றுப் பதிகம் பாடி சுரம் தீர்த்தார் திருஞானசம்பந்தர். கண்ட அமணர் பீதி கொண்டனர். அழிந்தது நமது சமயக் கொள்கை என அலறினர். அருள் நாதம் மெய்மையை அறிவிக்கும். அம்மெய்மையை உள்ளத்தில் அழுத்தி அதை உண்மை ஆக்குவம். உண்மையை வாய் வழி வெளிப்படுத்தி அதை வாய்மை ஆக்குவம். வாய்மையை ஒலி ஆக்குவம். ஒலியை எழுத்தாக்குவோம். எழுத்தை ஏட்டாக்குவோம். தெய்வ அந்த ஏட்டை தீயில் சேர்ப்போம். வேகாத ஏடு வெற்றி பெற்றது என்று வாதத்தை அமணர் வளர்த்தினர். சுர வாதில் தோற்ற அமணர் தூய அனல் வாதிலும் தோற்றனர். மீண்டும் வாதத்தில் முடி சூடலாம் என்று எண்ணினர். புனல் வாதம் செய்வோம், தோற்றவர் கழு ஏற வேண்டும் என்று தம்மைத் தாமே வஞ்சிக்கொண்ட தடுமாற்றத்தால் தம் சமய உண்மை தழுவிய ஏட்டை வெள்ளம் பெருகிய வைகையில் இட்டனர். அந்த ஏட்டை வெள்ளம் அடித்துச் சென்றது.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீய எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே - என எழுதிய திருப்பாசுர ஏட்டை
வெள்ளப் பெருக்கில் இட்டார் பிள்ளையார்.

விளக்கக் குறிப்புகள்
பிண்டியும் தண்டும் பாயும் பீலியும் குடையும் வெந்து....கையில்
குண்டிகை நீரும் நின்று கொதித்திடக் கண்டார் குண்டர்........திருவாலவாயுடையார்
புராணம் 37.63. ஆ பீலி வெந்துய ராலி .........
பீறு வெங்கழு வேற வென்றிடு - சம்பந்தர் வரலாறு பாடல் 187ல் காண்க
• கும்பி பாகம் என்ற நரகம் ஏழு நரகங்களில் ஒன்று. பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம். ஏழு நரகங்கள்: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).

Last edited by soundararajan50; 03-08-17, 06:37.