87.மூலங்கிளர்
மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய முதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேவள விடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே
சூலங்கலை மான்மழு வோர்துடி
தேவன்தலை யோடும ராவிருரி
தோடுங்குழை சேர்பர னார்தரு முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய பெருமாளே.
-87 பழநி
[diiv6]பதம் பிரித்து உரை
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு
நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை
மூள் பிங்கலை நாடி ஒடு ஆடிய முதல் வேர்கள்
மூணும் பிரகாசம் அதாய் ஒரு
சூலம் பெற ஓடிய வாயுவை
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி
பாலம் கிளர் ஆறு சிகாரம் ஒடு
ஆரும் சுடர் ஒடு பராபர
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி
பாடும் தொனி நாதமும் நூபுரம்
ஆடும் கழல் ஓசையிலே பரிவாகும்
படியே அடியனையும் அருள்வாயே
சூலம் கலை மான் மழு ஓர் துடி
தேவன் தலையோடும் அரா விரி
தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே
சூரன் கரம் மார் சிலை வாள் அணி
தோளும் தலை தூள் படவே அவர்
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா
காலின் கழல் ஓசையும் நூபுரம்
வார் வெண்டைய ஓசையும் உக
காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே
கானம் கலை மான் மகளார் தமை
நாணம் கெடவே அணை வேள் பிரகாசம்
பழனா புரி மேவிய பெருமாளே.[/div6]

பத உரை
மூலம் கிளர் = மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற. ஓர் உருவாய் = ஒரு உருவமாக. நடு = உடலின் நடுவில். நாலு அங்குல மேல் = நான்கு அங்குல அளவின் மேல். நடு வேர் = சுழுமுனை. இடை = இடை கலை. மூள் பிங்கலை = தோன்றும் பிங்கலை (என்னும்).நாடியோடு ஆடிய = நாடிகளுடன் கலந்து. முதல் வேர்கள் = முதல் வேர்களாகிய.
மூணும் = இந்த மூன்று நாடிகளும். பிரகாசம் அதாய் = ஒளி விட்டு.ஒரு = ஒப்பற்ற. சூலம் பெற = சூலாயுதம் போல. ஓடிய வாயுவை =ஓடுகின்ற பிராண வாயுவை. மூலம் திகழ் தூண் வழியே = (முதுகு தண்டிலுள்ள) சுழு முனை வழியில். அளவிட ஓடி = கணக்காக ஓடச் செய்து.
பாலம் கிளர் = (நெருப்பாறு, மயிர்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும். ஆறு = ஆறாவது ஆதாரமாகிய ஆஞ்ஞை நிலையில்.சிகாரமோடு = சிகார அக்ஷரத்தோடு. ஆரும் = பொருந்தி நிறைந்து. சுடர் ஆடும் = ஒளி வீசுகின்ற. பராபர = பரம் பொருளின். பாதம் பெற = திருவடிகளைப் பெறுதற்கு. ஞான சதாசிவம் அதில் மேவி =ஞான சதாசிவ நிலையை அடைந்து.
பாடும் தொனி = (அவ்விவிடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலி.நாதமும் = நாதத்திலும். நூபுரம் ஆடும் கழல் ஓசை = சிலம்பொலியுடன் கழல் ஒலியிலும். பரிவாகும்படியே = அன்பு பொருந்தும்படியாக. அடியேனையும் அருள்வாயே = அடியேனுக்கு அருள் புரிவாயாக.
சூலம் = திரி சூலம். கலைமான் = கலைமான். மழு = மழுவாயுதம். ஓர் = ஒப்பற்ற. துடி = உடுக்கை. தேவன் தலை = பிரமனின் கபாலம். ஓடு = இவைகளுடன். அரா = பாம்பு. விரி = விளங்கும். தோடும் = தோடு. குழை சேர் = குழை இவை சேர்ந்துள்ள. பரனார் = சிவபெருமான். தரு முருகோனே = பெற்ற முருகனே.
சூரன் கரம் = சூரனுடைய கை. மார் = மார்பு. சிலை = வில். வாள் = வாள். அணி = அழகிய. தோளும் = தோளும். தலை = தலையும். தூள் படவே = தூள்படவும். அவர் சூளும் = அவன் தேவர்களைச் சிறையினின்றும் விடேன் என்ற) சபதமும். கெட = பாழாகவும். வேல் விடு சேவக = வேலைச் செலுத்திய வீரனே. மயில் வீரா = மயில் வீரனே.
காலின் கழல் ஓசையும் = காலில் அணிந்துள்ள கழலின் ஒலியும். நூபுரம் = சிலம்பொலியும். வார் வெண்டையம்= வீரக் காலணியின். ஓசையுமே = ஒலியும். உக காலங்களின் = உக முடிவைக் காட்டும். ஓசையதா(க) = ஓசைகளாகத் திகழும்படி. நடம் இடுவோனே = நடனம் புரிபவனே.
கானம் = காட்டில் (வந்த). கலை மான் மகளார் தமை = கலை மானின் மகளாகிய வள்ளியை. நாணம் கெடவே = கூச்சம் அழிய. அணை = அணைகின்ற. வேள் = வேளே. பிரகாசம் பழனாபுரி = ஒளி வீசும் பழனியில். மேவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஒரு உருவாகச் சென்று, சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகளுடன் கலந்து, பிராண வாயுவை சுழு முனை வழியில் கணக்காக ஓடச் செய்து, நெற்றியின் மத்தியில் விளங்குகின்ற ஆறாவது ஆதாரமாகிய ஆஞ்ஞை நிலையில் சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிறைந்து, ஒளி வீசும் பரம் பொருளின் பாதத்தைப் பெற, ஞான சதாசிவ நிலையை அடைந்து, அங்கு கேட்கப்படும் நாதத்திலும், சிலம்பு, கழல் ஆகியவைகளின் ஒலிகளிலும் அன்பு பெருகும்படியாக அடியேனுக்கு அருள்வாயே.
சூலம், மான், மழு, துடி, கபாலம் பாம்பு, தோடு குழை இவைகள் சேர்ந்துள்ள சிவபெருமான் தந்த முருகனே. சூரனுடைய கை, மார்பு, வில், வாள், தலை ஆகியவை தூள்படவும், தேவர்களை விடுவதில்லை என்ற சபதம் பாழாகவும், வேலை ஏவிய மயில் வீரனே. சிலம்பொலிகள் உக முடிவைக் காட்டும் ஓசை களாகத் திகழும்படி நடனம் புரிபவனே. காட்டில் வாழ்ந்த வள்ளியை அணைந்த வேளே. பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. சிவயோகத்தில் நான் நிலைக் கும்படி அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. இப்பாடலில் சிவ யோக முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விபரங்களைப் பின் வரும் சில திருப்புகழ்ப் பாடலில் காணலாம். ஆசைநாலு, வாதினை, மூலங்கிள, ஞானங்கள், சூலமென, நாலுசதுரத்த, கட்டிமுண்டகர
இடைகலை = பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.
பிங்கலை = பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியாய் விடும் சுழு முனை = இடை கலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. சுழு முனை ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. இடையும், பிங்கலையும் கத்திரிக்கைகால் போல் பின்னி நிற்பன.
ஆ. சூலம் பெற ஓடிய வாயுவை....
சூலமென வோடு சர்ப்ப வாயுவை விடாதடக்கி).............திருப்புகழ், சூலமென.
இ. பாடுந் தொனி நாதமு நூபுர மாடுங் கழலோசையிலே....
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளோடு குலாவி ..............................திருப்புகழ், (ஞானங்கொள்.
நாதங்கள் பத்து. கிண்கிணி, சிலம்பு, மணிசங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில். இவை யோகிகளால் உணரப்படுவன. ( பாடல் 75)