86.மனக்கவலை
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் தவறாதே
வகைப்படிம னோரதங்கள் தொகைப்படியி னால்நி னைந்து
மயக்கமற வேத முங்கொள் பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவணங்க வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயிரங்கி
மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த பெருமாளே.
-86 பழநி

.................................
சுருக்க உரை
மனக் கவலை சிறிதும் இல்லாமல், உனக்கு அடிமை செய்வதையே பணியாகக் கொண்டு, நீதி நூல் முறைகளில் தவறாமல், நல்ல முறையில் ஒழுகி, வேதங்களில் சொல்லப் பட்ட பொருளை ஆராய்ந்து, சினத்தை விலக்கி, கடமைகளைச் செய்து, மேம்பட்டு விளங்க நீ அருளைத் தர வர வேண்டும்.
உன்னிடம் அடைக்கலமாக வந்த தவசிகள், சான்றோர், தேவர்கள் பொருட்டு மனம் இரங்கி, பயமுறுத்தி வந்த சூரனை வென்ற கூரிய வேலனே. முன்பு தினைப் புனத்தில் நடந்து சென்று, குறப் பெண் வள்ளியை மணம் புரிந்தவனே. செழிப்பு மிக்க பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. உன்னை நான் முறைப்பட வணங்க அருள் புரிவாயாக.

ஒப்புக
உனக்கு அடிமையே புரிந்து....
ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்.
............. ..கந்தர் அனுபூதி
உனக்கு அடிமையே புரிந்து....
ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்.