83.பாரியான
பாரியான கொடைக்கொண்ட லேதிரு
வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு
பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம
பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள்
சீலஞால விளக்கின்ப சீவக
பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச்
சீரதாக எடுத்தொன்று மாகவி
பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை
சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே
சேயபாவ கையைக்கொண்டு போயறி
யாமலேக மரிற்சிந்து வார்சிலர்
சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ
ஆருநீர்மை மடிக்கண்க ராநெடு
வாயினேர்ப டவுற்றன்று மூலமெ
னாரவார மதத்தந்தி தானுய அருள்மாயன்
ஆதிநார ணனற்சங்க பாணிய
னோதுவார்க ளுளத்தன்பன் மாதவ
னானநான்மு கனற்றந்தை சீதரன் மருகோனே
வீரசேவ கவுத்தண்ட தேவகு
மாரஆறி ருபொற்செங்கை நாயக
வீசுதோகை மயிற்றுங்க வாகன முடையோனே
வீறுகாவி ரியுட்கொண்ட சேகர
னானசேவ கனற்சிந்தை மேவிய
வீரைவாழ்ப ழநித்துங்க வானவர் பெருமாளே.
- 83 பழநி
பாரியான கொடைக்கொண்ட லேதிரு
வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு
பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம
பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள்
சீலஞால விளக்கின்ப சீவக
பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச்
சீரதாக எடுத்தொன்று மாகவி
பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை
சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே
சேயபாவ கையைக்கொண்டு போயறி
யாமலேக மரிற்சிந்து வார்சிலர்
சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ
ஆருநீர்மை மடிக்கண்க ராநெடு
வாயினேர்ப டவுற்றன்று மூலமெ
னாரவார மதத்தந்தி தானுய அருள்மாயன்
ஆதிநார ணனற்சங்க பாணிய
னோதுவார்க ளுளத்தன்பன் மாதவ
னானநான்மு கனற்றந்தை சீதரன் மருகோனே
வீரசேவ கவுத்தண்ட தேவகு
மாரஆறி ருபொற்செங்கை நாயக
வீசுதோகை மயிற்றுங்க வாகன முடையோனே
வீறுகாவி ரியுட்கொண்ட சேகர
னானசேவ கனற்சிந்தை மேவிய
வீரைவாழ்ப ழநித்துங்க வானவர் பெருமாளே.
- 83 பழநி
சுருக்க உரை
பாரி வள்ளலைப் போன்ற கொடை மேகமே. இலக்குமி வாசம் செய்யும் பெரிய மாலையைப் புனைந்த திண்ணிய புயங்களை உடையவனே. ஏழு உலகங்களிலும் எட்டிய புகழைக் கொண்டவனே. பாவலர்களுக்கு என்றும் வாழ்வை அருளும் சீல ஞால விளக்கே. இந்திரன் போல் உயர்ந்த அரசனே. இவ்வாறெல்லாம் கூறி, அருமையான பாடலைப் பாடினலும், இரங்காமல் சீறுபவர்கள் கடைவாயிலில் சென்று தாம் வீணாகச் சேர்வு அடையும்படி. செம்மையான பாடல்களை நிலப் பிளவில் வீணாகக் கொட்டுவது போல், இரக்கம் சிறிதும் இல்லாத மக்களுக்கு அருகில் நாம் சேரலாமோ?
கரிய முதலையில் வாயில் அகப்பட்ட மத யானையாகிய் கஜேந்திரன் ஆதி மூலமே என்று பேரொலி செய்ய, அந்த யானை பிழைக்கும்படி அருளிய மாயவன், ஆதி நாராயணன் சங்கு ஏந்திய கையன். துதிப்பார்கள் மனதில் உறைபவன். பிரமனின் தந்தை. இத்தகைய திருமாலுக்கு மருகனே. வீரமும், உக்கிரமும் நிறைந்த தெய்வக் குமாரனே. மயில் வாகனனே. கலிசைச் சேவகனின் மனத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. பழனியில் உறைபவனே. தேவர்கள் பெருமாளே. இரக்கம் இல்லாதவர்களின் அருகில் நான் உறலாமோ?

ஒப்புக:
அ. பாரியான கொடைக் கொண்டலே....
கொடுக்கில்லாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை....
...........................................................................................................................சம்பந்தர் தேவாரம்
ஆ காவிரி சேவகன் .................................................................. பாடல் 72,73 குறிப்பில் பார்கக
கலிசை சேவகன் பழனி , கஜேந்திரன்