82. .பஞ்ச பாதகன்
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை
பங்கள் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை யருள்பாலா
கொஞ்ச மாசுகம் பொலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயிற் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழனி வாழ்குமர பெருமாளே.
- 82 பழநி
]div5]ஒப்புக
பஞ்ச பாதகன் பாவி.... கொலை, களவு, பொய், கள் குடித்தல், குருநிந்தை ஆகியவை.
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி... ............................................ .திருப்புகழ், பஞ்சபாதக
விளக்கக் குறிப்புகள்
கந்தி - கமுகு. சுகம் - கிளி. சந்தானம் - தேவ லோக தெய்வீக மரங்களுள் ஒன்று. மற்றவைகள்: அரி சந்தானம் மத்தாரம், பாரிஜாதம், கற்பகம்,.
பாகு - துவர்ந்த பாக்கு[/div5\].

சுருக்க உரை
பஞ்ச பாதகங்களும் செய்பவன், சூது, கொலை இவற்றைச் செய்பவன், பண்பில்லதவன், பாவமாகிய கடலுள் நுழையும் செருக்கும், ஆணவமும் கொண்டவன், பெண், மண், பொன் என்னும் மூவாசைகளால் தாக்குண்டு, நரகில் வீழ்பவன், ஐந்து பெரிய மலங்கள் கூடி,அதனால் உண்டாகும் பாசங்களால், பொருள் ஈட்டுவதில் என் நேரத்தைக் கழிப்பவன் அல்லாது அருள் பெற்ற அன்பர்களுடன் கூடி அறியாதப் புகழைக் கொண்டவன். நான் இத்தகைய கொடியவனாக இருந்தும், தேவர்களும், திருமாலும், பிரமனும் தேடிக் காண முடியாத சோதி வடிவான சந்திர சேகரனும், உமா தேவியும் கூடி விளையாடும் அழகிய சிவ லோகத்தில் நானும் கூடி விளையாட அருள் புரிவாயாக.
வஞ்சகம் நிறைந்த சூரனும், அவனது சேனையும், கடலும், கிரௌஞ்ச மலையும் ஒடுங்க, ஒளி வீசும் வேலைச் செலுத்திய திருக்கரம் உடையவனே, கடம்பு மலர் விளங்கும் முடியை உடைய முருகனே, இராமனுடைய தங்கை, சூலம் ஏந்தியவள், அழகிய காளி, என்னைப் பெற்றவள், வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் சிவகாமி அருளிய பாலனே, கிளி பொன்ற மொழியும், மயில் போன்ற சாயலும் உள்ள வள்ளியை அணைபவனே, சோலைகளும் கமுக மரங்களும் சூழ்ந்த பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் சிவ லோகத்தில் கூடி விளையாட அருள் புரிய வேண்டும்.