Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    78. தலைவலி
    தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
    விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
    சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே
    தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
    பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
    சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே
    உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
    வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
    முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம்
    உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
    வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
    உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்
    அலைகட லடைத்தேம காகோர ராவணனை
    மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
    அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே
    அறுகினை முடித்தோனை யாதார மானவனை
    மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
    அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் வருவோனே
    பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
    யிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்
    பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு மணவாளா
    பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள்துயில்
    வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
    பழனிவரு கற்பூர கோலாக லாவமரர் பெருமாளே.

    -78 பழநி

    பதம் பிரித்தல்
    தலைவலி மருந்து ஈடு காமாலை சோகை சுரம்
    விழி வலி வறட் சூலை காயா சுவாசம் வெகு
    சலம் மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே
    தலை வலி = தலைவலி. மருந்து ஈடு = வசிய மருந்தினால் வரும் நோய். காமாலை = (மஞ்சள்) காமாலை சோகை = இரத்தக் குறைவு. சுரம் = சுரம் விழி வலி = கண் நோய் வறட் சூலை = வறள் வலிப்பு எனப்படும் வயிற்று வலி காய சுவாசம் = காசமும் அதனால் வரும் மூச்சு வேதனை வெகு சலம் = நீர் கோத்தல் மிகு விஷப் பாகம் = விஷத்தினால் வரும் நோய்கள் மாய விகார பிணி =உலக மாயையால் வரும் விகாரமான பிணிகள் அணுகாதே =என்னை அணுகாதபடி


    தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது
    பரிகரி என காது கேளாது போலும் அவர்
    சரியும் வயதுக்கு ஏது தாரீர் எனவும் விதியாதே


    தலம் மிசை = பூமியில். அதற்கான பேரோடு = அந்த நோய் போகத் தகுந்த பேர்களிடம் (அந்த நோய்களைக் கூறி). இது பரிகரி என =இது நீங்குதற்கு வழி என்ன என்று கேட்டால். காது கேளாது போலும் அவர் = காது கேட்காதவர்களைப் போல அவர்கள். சரியும்= வெளிப் போகின்றவர்கள் (சிலர்). வயதுக்கு எது தாரீர் சொலீர் எனவும் = உங்களுக்கு வயதாகி விட்டது, என்ன தான் கொடுப்பது, சொல்லவும் என்று மற்றும் சிலரும். விதியாதே =(கூறும்படியான) விதியை என் தலையில் எழுதாமல் இருக்கும்படி.


    உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர்
    வகை வகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம்
    உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் இரு பாதம்


    உலைவு அற = ஊக்கக் குறைவு இல்லாமல் விருப்பாக = விருப் பத்துடன் நீள் காவின் = பெரிய பூந்தோட்டத்தில் வாச மலர் = நறு மணம் உள்ள மலர்களை வகை வகை எடுத்து = வகை வகையாக எடுத்து தோடா = தொடுத்து மாலிகாபரணம் = அம் மலர் மாலையான ஆபரணங்களை உனது அடியில் சூடவே = உனது திருவடியில் சூடுதற்கு நாடும் மாதவர்கள் = நாடுகின்ற சிறந்த தவசிகளுடைய இரு பாதம் = இரண்டு திருவடிகளையும்.


    உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள்
    வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ
    உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும்.


    உளம் அது தரித்தே = உள்ளத்தில் தரித்து வினாவோடு = ஆய்ந்த அறிவோடு பாடி அருள் வழி பட = பாடித் துதித்து வழிபட எனக்கே தயாவோடு = எனக்குக் கருணை கூர்ந்து தாள் உதவ = உனது திருவடிகைளைத் தர உரகமது எடுத்து ஆடு = பாம்பை எடுத்து (உதறி) ஆடுகின்ற மேகார மீதின் மிசை = மயில் வாகனத்தின் மீது ஏறி. வர வேணும் = வர வேண்டுகின்றேன்.


    அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை
    மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை
    அடல் உடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே


    அலை கடல் அடைத்தே = ஒலிக்கும் கடலை அடைத்து மகா கோர ராவணனை = மிக அச்சம் தரும் இராவணனுடைய மணி முடி துணித்து = தலைகளை அறுத்துத் தள்ளி ஆவியேயான = உயிருக்கு ஒப்பான ஜானகியை = சீதையை அடலுடன் = தனது புய வலிமையால் அழைத்துக் கொள் = அழைத்துக் கொண்ட மாயோனை= மாயவனாகிய திருமாலை மாமன் எனும் மருகோனே = மாமன் என்று அழைக்கும் மருகனே.


    அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை
    மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் மு(ன்)னம்
    அவை தனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே


    அறுகினை = அறுகம் புல்லை முடித்தோனை = முடியில் சூடியவனும் ஆதாரம் ஆனவனை = எல்லா உயிர்களுக்கும் ஆதாரமானவனும் மழு உழை பிடித்தவனை = மழுவாயதத்தையும், மானையும் ஏந்தியவனும் மாகாளி நாண = காளி தேவி வெட்கப்படும்படி மு(ன்)னம் = முன்பு அவைதனில் = சபையில்நடித்தோனே = நடனம் செய்தவனும் ஆகிய சிவபெருமானைதாதையே எனவும் = தந்தையே என்று அழைக்க. வருவோனே =வந்தவனே.


    பல கலை படித்து ஓது(ம்) பாவாணர் நாவில் உறை
    இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய்
    பரண் மிசை குறப்பாவை தோள் மேவும் மோகம் உறு மணவாளா


    பல கலை படித்து ஓது(ம்) = பல நூல்களைக் கற்று ஓதும் பாவாணர் =கவிகளுடைய நாவில் உறை = நாவில் உறைகின்ற இரு சரண வித்தார = இரண்டு திருவடிகளை உடைய புலவனே வேலாயுதா =வேலாயுதனே உயர் செய் = உயரத்தில் கட்டப்பட்ட பரண் மிசை =பரணையின் மேல் குறப்பாவை = குறப் பெண்ணாகிய வள்ளியின் தோள் மேவ = தோளைச் சேர்வதற்கு மோகம் உறு மணவாளா = ஆசை கொண்ட கணவனே.


    பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில்
    வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர்
    பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே.


    பதும வயலில் = தாமரை மலர்கின்ற வயலிலும் பூகம் மீதே = கமுக மரத்தின் மீதும் வரால்கள் = வரால் மீன்கள் துயில் = துயிலும்படிவரு புனல் பெருக்கு ஆறு = வருகின்ற நீர்ப் பெருக்கை உடையகாவேரி நதி சூழ வளர் = சூழ வளர்கின்ற பழனி வரு = பழனிமலையில் எழுந்தருளியுள்ள கற்பூர = பச்சைக் கற்பூரம் ஆகியகோலாகலா = மணங்கள் கமழும் அலங்கார ஆடம்பரனே அமரர் பெருமாளே = தேவர்களின் பெருமாளே.




    ஒப்ப்புக
    மருந்து ஈடு....
    பதறி யெச்சிலை யிட்டும ருந்திடு
    விரவி குத்திர வித்தைவி ளைப்பவர்.............................................திருப்புகழ்,பழமைசெப்பிய
    சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருந்திட்டு ஆட்டி........................திருப்புகழ்,வார்குழல்
    முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் கலி சூழ.....................................திருப்புகழ்,முத்தமோகன


    பாம்பை வாயில் எடுத்து வைத்துருக்கும் மயில் உக்கிரமான (கோர) மயில் என சொல்லப்படும்
Working...
X