78. தலைவலி
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள்துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழனிவரு கற்பூர கோலாக லாவமரர் பெருமாளே.
-78 பழநி

சுருக்க உரை
தலைவலி, சுரம், சூலை நோய், காசம் முதலிய கொடிய பிணிகள் என்னை அணுகாமல் இருக்கவும், அந்த நோய்களுக்குப் பரிகாரம் கேட்டால், காது கேளாமல் போவாரும், வயதுக்கு ஏது மருந்து என்போரும் கூறும் பேச்சுக்களை நான் கேட்காமல் இருக்கவும், என் தலையில் எழுதி விடாதபடியும், புது மலர்களைத் தொடுத்து, உன்னை அலங்கரித்துப் பொற்றும் தவ வலிமை உள்ளோரின் இரண்டு பாதங்களை என் மனதில் கொண்டு, உன் அருள் கூர்ந்து, பாம்பை வாயில் கொண்ட மயிலின் மீது ஏறி வந்து அருள வேண்டும்.
கோரமான இராவணனுடைய முடிகளை அறுத்துத் தள்ளி, சீதையை மீள்வித்த இராமனை மாமன் என அழைப்பவனே, அறுகு, மான், மழு இவைகளை ஏந்தியவனும், காளி வெட்கம் அடைய அவளுடன் நடனம் ஆடியவனும் ஆகிய சிவபெருமானைத் தந்தை என்று அழைக்க வந்தவனே, பல நூல்களைக் கற்ற கவிகளுடைய நாவில் உறைகின்ற இரண்டு திருவடிகளை உடைய புலவனே, தாமரை மலர்கின்ற வயல்களிலும், கமுக மரத்தின் மீதும் வரால் மீன்கள் துயிலும்படி பெருகி வரும் காவேரி ஆறு சூழ விளங்கும் பழனி மலையில் எழுந்தருளியிருக்கும் தேவர்கள் பெருமாளே, நான் பிணி இன்றி வாழ மயில் மீது ஏறி வந்து அருள வேண்டும்.

ஒப்ப்புக
மருந்து ஈடு....
பதறி யெச்சிலை யிட்டும ருந்திடு
விரவி குத்திர வித்தைவி ளைப்பவர்.............................................திருப்புகழ்,பழமைசெப்பிய
சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருந்திட்டு ஆட்டி........................திருப்புகழ்,வார்குழல்
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் கலி சூழ.....................................திருப்புகழ்,முத்தமோகன
பாம்பை வாயில் எடுத்து வைத்துருக்கும் மயில் உக்கிரமான (கோர) மயில் என சொல்லப்படும்