77.தமருமமரும்
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.
-77 பழநி
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.
-77 பழநி
சுருக்க உரை
சுற்றத்தாரும், மனையும், உற்ற செல்வமும், பதவிகளும் என்னை விட்டு விலகும்படி, கொடுமை வாய்ந்த யமன் தன் பாசக் கயிற்றை என் மீது எறியாதபடி, தாமரை போன்றதும், தூய, அருமை வாய்ந்த உனது திருவடிகளைத் தியானிக்கும் அறிவை எனக்குத் தந்தருள
வேண்டுகின்றேன்.
குமரனே, போரில் வல்ல முருகனே, பரமனே, பழனி மலையில் வீற்றிருப்பவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே,தேவர்கள் துன்பம் தீரவும், அசுரர்கள் அழியவும் போர் செய்து அருளியவனே, அறமும், மயிலும், வேலும் உடைய பெருமாளே, யமன் என்னை அணுகாதபடி, உன்னைத் தியானிக்க எனக்கு அருள் புரிய வேண்டும்.