73.சீறலசடன்
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே
மாக முகடதிரவீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் பெருமாளே.
-73 பழநி
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே
மாக முகடதிரவீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் பெருமாளே.
-73 பழநி
சுருக்க உரை
பெருங் கோபம் உடைய அசடன், தீ வினை புரிபவன், ஒழுக்கம் இல்லாதவன், பிறவியாகிய நோயைத் தேடுபவன், நீதி, நெறி, நேர்மை, சிறப்பு இவை சிறிதேனும் இல்லாதவன், உன் திருவடியைப் போற்றாத தீயோன், அறிவிலி, பயனற்றவன் என்று நான் பல தீக்குணங்கள் படைத்தவனாக இருந்த போதிலும், உன் அடியார் கூட்டத்துடன் என்னைச் சேர்த்து வைக்கும் வழியை அருள் புரிவாயாக.
போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் மாள சண்டை செய்து வெற்றி முடி சூட்டியவனே. ஆகாயம் வரை அதிரும்படி, இறக்கையை வீசம் மயிலைக் குதிரையாகக் கொண்டவனே, கலிசை என்னும் ஊர் மன்னனின் மனக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமை உடையவனே,வீரை நகர் என்னும் தலத்தில் உறையும் குமரனே, பழநி வேலனே,தேவர்கள் பெருமாளே, என்னை உன் அடியார்களோடு கூட்டி வைக்க அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. வீரை உறை குமர....
வீரையூர் என்னும் தலம் திருப்பெருந்துறைக்கு மேற்கே, பார்த்திபனூருக்கு அருகே உள்ளது
ஆ. கலிசை வரு சேவகன்....
மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடப் பட்ட மூவர் கலிசைச்
சேவகனார், (சீயுதிரமெங்கு, சீறலசடன் ,தோகைமயிலேக, கோல மதி வதனம், இருகனக மாமேரு), பிரபுட தேவராஜன் (அதல சேடனாராட) , சோமநாதன் (ஒருவழிப்படாது).
இ. சீறல் அசடன்.... தன்னையே தலை மகனாகப் பாவித்தல்.
ஈ. எனினும் எனை நீ உன் அடியரொடு....
• துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய்....................................................தாயுமானவர் சுகவாரி
• அடியார்வாழ் சபையின் ஏற்றியின் ஞானபோதமும்
அருளி ஆட்கொள்ளும்).............................................................திருப்புகழ்,நிருதரார்க்கொரு
இவ்வேண்டுகோள் அருணகிரியாருக்குப் பலித்தது. போதமிலேனை
அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா..............................கந்தர் அலங்காரம்