Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    69.குரம்பை மலசலம்


    குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
    எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
    குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல சுகமாலக்
    குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
    இடும்ப ரொடுவழி யிணையிலர் கசடர்கள்
    குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை விறலான
    சரம்ப ருறவனை நரகனை துரகனை
    இரங்கு கலியனை பரிவுறு சடலனை
    சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித்
    தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
    அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
    தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே
    இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
    லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
    லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் வளநாடா
    இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
    டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
    இரைந்த வசுரரொ டிபபரி யமபுரம் விடும்வேளே
    சிரம்பொ னயனொடு முனிவர்க ளமரர்கள்
    அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
    செயம்பு வெனநட மிடுபத மழகியர் குருநாதா
    செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
    சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
    செயங்கொ டணைகுக சிவமலை மருவிய பெருமாளே

    - 69 பழநி





    பதம் பிரித்து உரை


    குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு
    எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி
    குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல சுகமாலம்


    குரம்பை = சிறு குடிலாகிய வழுவளு நிணமொடு = கெட்ட வழுப்பான கொழுப்பும் எலும்பு = எலும்பு அணி சரி தசை =அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும் இரல் = ஈரல் குடல் = குடல்நெதி குலைந்த செயிர் மயிர் = முறையின்றி சிக்குற்ற மயிர்களும்குருதி = இரத்தம் இவையொடு = இவைகளுடன் சுக மாலம் =கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான.


    குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர்
    இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
    குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன


    குடின் புகுதும் அவர் = இந்த வீட்டில் ஐவர் குடி புகுந்துள்ளனர் அவர் கடு கொடுமையர் = அவர்கள் மிகவும் கடுமையானகொடுங்குணத்தினர். இடும்பர் = அகந்தை கொண்டவர்கள் ஒரு வழி இணையிலர் = ஒரு வழியில் போகாதவர்கள் கசடர்கள் = குற்றம் உடையவர்கள் குரங்கர் = குரங்கு போல் சேட்டை செய்பவர்கள் அறிவிலர் = அறிவில்லாதவர்கள் நெறியிலர் = நன்னெறியில் ஒழுகாதவர்கள் மிருகணை விறல் ஆன = மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள்.


    சரம்பர் உறவனை நரகனை துரகனை
    இரங்கு கலியனை பரிவு உறு சடலனை
    சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி
    சரம்பர் = விடம் போன்ற குணம் உடையவர்கள் உறவனை =(இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை நரகனை = நரகம் புகுகின்றவனை. துரகனை = குதிரை போல் மிக வேகமாக செல்லும் மனத்தை உடையவனை இரங்கு கலியனை = அழுது ஏங்கும் வறியவனை பரிவு உறு சடலனை = (துன்பத்துக்கு உறைவிடமாகிய) உடல் மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை சவுந்தரிக முக = அழகிய முகத்தவனே சரவண = சரவணப் பொய்கையில் தோன்றியவனே பதமொடு = (நீ) அழகோடு மயில் ஏறி = மயிலின் மீது ஏறி வந்து.




    தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில்
    அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
    தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே


    தழைந்த = செழிப்புடன் பூரித்த சிவ சுடர் தனை = சிவ ஒளியை என =என்னுடைய மனதினில் அழுந்த = மனதில் அழுந்தும்படி உரைசெய =நன்கு ஒதி உபதேசிக்கும் பொருட்டு வரு = வந்த முக நகை ஒளி =திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும் தழைந்த நயனமும் = குளிர்ந்த கண் களையும் இரு மலர் சரணமும் = உனது மலர் போன்ற திருவடி களையும் மறவேனே = நான் மறவேன்.


    இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில்
    உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
    இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா


    இரும்பை = இலுப்ப மரங்களும் வகுளமொடு இயை = மகிழ மரங்களும் இவைகளுடன் தங்கும் பல முகில் பொழில் உறைந்த =பல சோலைகளிலும் உறைகின்ற குயில் அளி = குயில்களும்வண்டுகளும் ஒலி பரவிட = இனிமையான ஒலிகளைச் செய்யமயில் இசைந்து நடம் இடும் = மயில் ஒத்து நடமிடுகின்ற. இணை இலி =இணை இல்லாத புலி நகர் = சிதம்பரம் வள நாடா =
    (ஆகிய) வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே.


    இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு
    எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
    இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே


    இருண்ட = இருள் சூழ்ந்த குவடு = கிரௌஞ்ச மலை இடி பொடி பட =இடிந்து பொடியாக வெகு முகடு = பல மலைகளும் பொடிபட.மகரம் = மகர மீன்கள் உறையும் கடல் எரிந்து = தீப்பற்றிக் கொள்ள ஒள் திசை கரி குமுறுக = ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற இரைத்த அசுரரொடு =ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு இப = (அவர்களுடைய)யானை பரி = குதிரை (படைகளையும்) யம புரம் விடும் = யம லோகத்துக்கு அனுப்பிய வேளே= தலைவனே.


    சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள்
    அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ
    செயம்பு என நடம் இடு பதம் அழகியர் குரு நாதா


    சிரம் = உயர்ந்த. பொன் அயனொடு = பொன் நிறம் கொண்டபிரமனும் முநிவர்கள் அமரர்கள் = முனிவர்களும் தேவர்களும்அரம்பை மகளிரொடு = அரம்பை மகளிரும் அரகர சிவ சிவ செயம்பு என =அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ நடம் இடு =நடனம் செய்கின்ற பதம் அழகியர் = திருவடி அழகிய சிவபெருமானுக்கு குருநாதா = குருநாதனே.


    செழும் பவள ஒளி நகை முக மதி நகு
    சிறந்த குற மகள் இணை முலை புதை பட
    செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே.


    செழும் பவள = செழித்த பவளம் போன்ற மதி நகு ஒளி நகை முக =நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும் சிறந்த =சிறப்புடன் அமைந்த குற மகள் = குறப் பெண்ணாகியவள்ளியின் இணை முலை புதை பட = இரு கொங்கைகளும்மார்பில் அழுந்தும் வண்ணம் செயம் கொடு அணை குக = வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே சிவ மலை மருவிய பெருமாளே = பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்
    இப்பாடலில் அருண கிரியார் முருகன் தரிசனம் தந்ததைக் குறித்து நன்றி
    செலுத்துகின்றார்.


    நெதி = நேதி (நியதி என்பதின் மரூஉ) - முறைமை. குடின் புகுதும் - குடி புகுதும்.
    இரும்பை - இலுப்பை. ஒடிசை - ஒள் திசை. மகரம்- மகர மீனுக்கு இடமான கடல்.
Working...
X