67.கருப்புவிலில்
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
உனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய பெருமாளே.
- 67 பழநி

சுருக்க உரை
விலை மாதர்களின் அங்கங்களின் சிறப்பால் அவர்களிடம் மயக்கம் கொள்ளாமல், உன்னுடன் ஒருமைப் பாடு உண்டாகும்படி என்னை இப் பூமியில்)அந்த இரகசியப்பிரணவப் பொருளை இந்த அடிமையும் பெறலாகுமா?
மயில் மீது வரும் முருகனே. மணிகள் பதித்த ஆபரணங்களை அணிந்த வயலூர் முருகனே. திருப்புகழை உரைப்பவர்களுக்கு வெற்றியைத் தந்தருளும் குரு நாதரே, குறவர்கள் குடிசையிலும், மேகங்கள் தவழும் பழனியிலும் வீற்றிருக்கும் வேல் ஏந்திய பெருமாளே, எனக்கு மறைப் பொருளை உணர்த்தும் நாள் என்று கிட்டும்?

விளக்கக் குறிப்புகள்
அ. ஒருப்படுதல் விருப்பு உடைமை.....
(ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்)
.................................................................................................. இராமலிங்க அடிகள் திருவருட்பா
ஆ. புவியில் ஒருத்தனாம்...
(என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி ..... மாணிக்க வாசகர் (திருவாசகம் - போற்றித் திருவகவல்
இ. இது கரந்துறை பாடல் என்று பெயர் பெறும். ஒவ்வொரு அடியிலும் இறுதியில்உள்ள
வரியை எடுத்து தனியே அமைத்தால் அது ஒரு தனித் திருப் புகழாக அமையும்.
கருத்தினால் விரகுசெய் மடமாதர்
கலக்குமோ கனமதில் மருளாதே
ஒருத்தனாம் வகைதிரு வருளாலே
உணர்த்துநா ளடிமையு முடையேனோ
பருத்ததோ கையில்வரு முருகோனே
பரக்கவே லயல் தெரி வயலு\ரா
திருத்தமா தவர்புகழ் குருநாதா
திருக்கைவே லழகிய பெருமாளே.
ஈ. உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி எனக் குறுகி........
(நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய் என ஓதிய தெப்பொருள்தான்).............................................................கந்தர் அனுபூதி
இந்தக் கருத்தை கூறும் மற்ற திருப்புகழ் பாடல்கள்.
பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே).................................... (கொண்டாடிக்கொஞ்சு)
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற்
றுங்கு ருத்து வங்கு றையுமோதான்)...............................................................(சயிலாங்கனைக்கு)
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொட
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்
கினிது ணர்த்தியருள்வாயே...............................................................................(அகரமுதலென)
புத்ரெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க் கருள் கூறும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் கருள்வாயே............................................................................ (துத்தி நச்ச)