Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    66.கரிய பெரிய


    கரிய பெரிய எருமை கடவு
    கடிய கொடிய திரிசூலன்
    கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
    கழிய முடுகி யெழுகாலந்
    திரியு நரியு மெரியு முரிமை
    தெரிய விரவி யணுகாதே
    செறிவு மறிவு முறவு மனைய
    திகழு மடிகள் தரவேணும்
    பரிய வரையி னரிவை மருவு
    பரம ரருளு முருகோனே
    பழன முழவர் கொழுவி லெழுது
    பழைய பழனி யமர்வோனே
    அரியு மயனும் வெருவ வுருவ
    அரியை கிரியை யெறிவோனே
    அயிலு மயிலு மறமு நிறமும்
    அழகு முடைய பெருமாளே.

    - 66 பழநி

    பதம் பிரித்து உரை


    கரிய பெரிய எருமை கடவு
    கடிய கொடிய திரி சூலன்


    கரிய பெரிய = கரு நிறம் வாய்ந்ததும் பெரியதுமான. எருமை கடவு =எருமைக் கடாவைச் செலுத்துகின்ற. கடிய கொடிய = கடுமையும் கொடுமையும் கொண்ட. திரி சூலன் = திரி சூலம் ஏந்தும் யமன்.


    கறுவி இறுகு கயிறொடு உயிர்கள்
    கழிய முடுகி எழு காலம்


    கறுவி = கோபித்து இறுகு = நெருக்கி கயிறொடு = பாசக் கயிறுகொண்டு உயிர்கள் கழிய முடுகி = உயிர்கள் நீங்கும்படிவேகமாக எழு காலம் = எழுந்து வரும்போது.


    திரியும் நரியும் எரியும் உரிமை
    தெரிய விரவி அணுகாதே


    திரியும் நரியும் = சுடுகாட்டில் திரியும் நரியும் எரியும் = தீயும் உரிமை தெரிய விரவி = தமக்குள்ள உரிமை காட்டி நெருங்கி அணுகாதே =என்னை அணுகாமல்.


    செறிவும் அறிவும் உறவும் அனைய
    திகழும் அடிகள் தரவேணும்


    செறிவும் = நிறையும் அறிவும் = அறிவும் உறவும் அனைய = உறவும் போன்ற திகழும் அடிகள் தரவேணும் = உனது விளக்கம் உற்ற திருவடிகளைத் தந்தருள வேண்டும்.


    பரிய வரையின் அரிவை மருவு
    பரமர் அருளும் முருகோனே


    பரிய = பெரிய. வரையின் அரிவை = இமகிரியின் மகளான பார்வதியை மருவு = மணந்த பரமர் = பரம சிவன் அருளும் முருகோளே = அருளிய அழகான குழந்தையே.


    பழனம் உழவர் கொழுவில் எழுது
    பழைய பழநி அமர்வோனே


    பழனம் = வயலில் உழவர் = உழவர்கள் கொழுவில் = ஏர்கால் கொண்டு எழுது = அழுந்திப் பதிய உழுகின்ற பழைய பழநி =பழமை வாய்ந்த பழநியில் அமர்வோனே = வீற்றிருப்பவனே.


    அரியும் அயனும் வெருவ உருவ
    அரிய கிரியை எறிவோனே


    அரியும் = திருமாலும் அயனும் = பிரமனும் வெருவ = அஞ்சி நிற்க.உருவ = உருவிச் செல்லும்படி அரிய = அருமை வாய்ந்த கிரியை= கிரௌஞ்ச மலைமீது எறிவோனே = வேலாயுதத்தைச் செலுத்தியவனே.


    அயிலும் மயிலும் அறமும் நிறமும்
    அழகும் உடைய பெருமாளே.


    அயிலும் = வேலும் மயிலும், அறமும் = மயிலும், அறமும் நிறமும் =ஒளியும் அழகும் உடைய = அழகும் வாய்ந்த பெருமாளே =பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    அ. கரிய பெரிய எருமை.......
    (தமர குரங்களும் காரிருட் பிழம்பு
    மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
    தழலுமிழ் கண்களும் காளமொத்த கொம்பு
    முளகதக்கட மாமேல் ...............................................................................திருப்புகழ் (தமரகுரங்க)
    ஆ. திரியும் நரியும் எரியும் உரிமை.....
    (எரியெனக் கென்னும் புழுவோ எனக்கெனும் இந்த மண்ணும்
    சரியெனக் கென்னும் பருந்தோ எனக்கெனும் தான் புசிக்க
    நரியெனக் கென்னும் புன்னாய் எனக்கெனும் இந் நாறுடலைப்
    பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே).....................................பட்டினத்தார்
    இ. திகழும் அடிகள் தரவேணும் ...
    ஆன்மா ஞானத்துடன் கலந்து ஞான மயமாக நிற்கும் தத்துவம். ஞானமே
    திருவடியாகும்.
Working...
X