66.கரிய பெரிய
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழனி யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரியை கிரியை யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே.
- 66 பழநி
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழனி யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரியை கிரியை யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே.
- 66 பழநி

சுருக்க உரை
எருமைக் கடாவின் மீது யமன் கோபத்துடன் வந்து அணுகும்போது என் அறிவும் உறவும் போன்ற உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.
இமவான் மகளான பார்வதியை மணந்த சிவபெருமானின் குழந்தையே. வயல்கள் நிறைந்த பழைய பழநி மலையில் வீற்றிருப்பவனே. திருமாலும், பிரமனும் அஞ்ச, கிரௌஞ்ச மலை மீது வேலைச் செலுத்தியவனே. வேலும், மயிலும், அறமும், அழமும் கொண்ட பெருமாளே. யமன் வரும்போது உன் திருவடிகளைத் தர வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்
அ. கரிய பெரிய எருமை.......
(தமர குரங்களும் காரிருட் பிழம்பு
மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
தழலுமிழ் கண்களும் காளமொத்த கொம்பு
முளகதக்கட மாமேல் ...............................................................................திருப்புகழ் (தமரகுரங்க)
ஆ. திரியும் நரியும் எரியும் உரிமை.....
(எரியெனக் கென்னும் புழுவோ எனக்கெனும் இந்த மண்ணும்
சரியெனக் கென்னும் பருந்தோ எனக்கெனும் தான் புசிக்க
நரியெனக் கென்னும் புன்னாய் எனக்கெனும் இந் நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே).....................................பட்டினத்தார்
இ. திகழும் அடிகள் தரவேணும் ...
ஆன்மா ஞானத்துடன் கலந்து ஞான மயமாக நிற்கும் தத்துவம். ஞானமே
திருவடியாகும்.