62.ஒருபொழுதும்
ஒருபொழுத மிருசரண நேசத் துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித் தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் பெருமாளே.
- பழநி

சுருக்க உரை
ஒருவேளை கூட உன் திருவடியில் அன்பு வைத்து அறிய மாட்டேன். உனது பழனி மலையை வணங்கி அறியேன். பூமியில் உயர்ந்த அரிய வாழ்க்கையைக் குறிக் கொள்ளவில்லை. இருப்பினும், பிறவி ஒழிய வேண்டும் என்று நினைக்கின்றேன். என் ஆசைகளை விட்டொழிக்க மாட்டேனோ?
அசுரர்களின் ஊர்களைச் சூறையாடியவனே, உன்னைத் தொழும் அடியார்களுக்குக் காவல் புரிபவனே, வெற்றிக் கவிகளான தேவாரத்தை உலகுக்குச் சம்பந்தராக அவதரித்து வழங்கியவனே,வேடுவப் பெண்ணாகிய வள்ளிக்கு உடனிருந்து காவல் புரிபவனே,என் ஆசைகளை விட்டொழிக்க வேண்டுகிறேன்.

ஒப்புக
அ. ஒரு பொழுது ...
• சரணகம லாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத) ----------------------------- திருப்புகழ் (சரணகமலால)
ஆ. ஆசைப் பாடைத் தவிரேனோ .....
• ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்) ---------------------------------------- திருமந்திரம் 2570
இ. விருது கவி விதரண .....
• உபயகுல தீப துங்க விருது கவி ராஜ சிங்க) -------------------- திருப்புகழ் (கருவினுருவாகி)
.
தலைப்புச் சொற்கள்
வள்ளி, துதி, பழனி