61.உலகபசு பாச
உலகபசு பாச தொந்த மதுவான
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை யணிசேயே
சரவணப வாமு குந்தன் மருகோனே
பலகலைசி வாக மங்கள் பயில்வோனே
பழநிமலை வாழ வந்த பெருமாளே.
- பழநி
உலகபசு பாச தொந்த மதுவான
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை யணிசேயே
சரவணப வாமு குந்தன் மருகோனே
பலகலைசி வாக மங்கள் பயில்வோனே
பழநிமலை வாழ வந்த பெருமாளே.
- பழநி
சுருக்க உரை
உற்றார், உறவினர், மனைவி, மக்கள் முதலிய பாச பந்தங்களாலும், மலம், சலம், மூச்சு முதலான துன்பங்களாலும், என புத்தி நிலை கெடாதவாறு உன் திருவருளைத் தந்தருளுக.
கங்கை, அறுகம்புல். பூளை, தும்பை இவைகளை அணிந்த சிவபெருமானுடைய குழந்தையே. சரவண பவனே. முகுந்தன் மருகனே. பல நூல்களாலும், சிவமகங்களாலும் போற்றப் படுபவனே. பழனி மலையில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. என் புத்தி கெடாமல் உனது அருளைத் தர வேண்டுகிறேன்.

விளக்கக் குறிப்புகள்
அ. மதி நிலை கெடாமல் ....
ஆன்மாக்களுக்கு உள்ள அறிவை ஆணவ மலம் மறைத்து அறியாமையை உண்டு செய்கின்றது.
ஆ. சிவாகமங்கள் ..... சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களையும் விளக்கி ஆகமங்களைக் கூறினார். இதைப்பற்றிய குறிப்பை பின்னால் பாடல் 369 விளக்கத்தில் காணலாம்.
ஒப்புக: நாலாறு மாகத்தின் நூலாய ஞானமுத்தி
நாடோறு நானுரைத்த நெறியாக ............................... திருப்புகழ் (நாவேறு)
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்................... திருப்புகழ் ( அவனிதனிலே)