59. அவனிதனிலே
அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேநடந்து இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதிய றுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த பெருமாளே
- பழநி

சுருக்க உரை
பூமியில் குழந்தையாகப் பிறந்து, தவழ்ந்து, அழுகு பெற நடந்து, மழலை மொழிகளைப் பேசி, பல விதங்களால் பெற்றோர்களால் வளர்ந்து, பதினாறு வயதான பின் சிவ கலைகள், ஆகமங்கள், வேதங்கள் இவைகளை ஓதும் அடியார்கள் திருவடியை நினைந்துத் துதியாமல், விலை மாதர்கள் ஆசை மிகுந்து, கவலை உற்று திரியும் என்னை உனது திருவடியில் சேர்ப்பாயாக.
மவுன உபதேசம் செய்த சம்பு, மதி, அறுகு, வேணி, தும்பை ஆகியவற்தை தலையில் அணியும் மகா தேவர் ஒரு பாகத்தில் உறையும் உமையின் மகனே, திருவுலா செய்ய விரும்பி மயில் மீது ஏறி வரும் வீரனே, மேலான நிலையில் பொருந்தி முருகன் என விளங்கி பழனி மலையில் மேல் அமர்ந்த பெருமாளே, அடியேனை உன்னுடைய திருவடியில் சேராய்.

விளக்கக் குறிப்புகள்
அ. சிவ கலைகள் ஆகமங்கள்......
சிவ கலைகள் -- 14 நூல்கள். ஆன்மாக்களுடன் அநாதியாயிருந்து, பதியை அடைய
ஒட்டாது மறைத்து, தன்னையும் காட்டாது பிறவற்றையும் அறிய ஒட்டாமல் செய்யும்
ஆணவ மலத்தினின்று நீங்கி, சிவத்தை அடையும் செந் நெறியை உணர்த்தி, உயிர்க்கு
உறுதியை நல்கும் 14 நூல்கள். அவையாவன –
திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், திருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கல்பநிராகரணம்.
இந்த நூல்களையே மெய்கண்ட சாத்திரம் என்பர்.
ஆகமங்கள் 28 வகையானவை. இவை சாரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களை உடையவை. இவைகளைப் பற்றி பின்னால் கண்போம்.
வேதம் பொது நூல். ஆகமம் சிறப்பு நூல்.
ஆ. தெரிவையர்கள் ஆசை மிஞவசி.....
தெரிவையர் - 25 முதல் 32 வயதுக்குட்பட்ட பெண்கள்.