58. அருத்தி வாழ்வொடு
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே
எருத்தி லேறிய இறைவர் செவிபுக வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை பெருமாளே.
-பழநி

சுருக்க உரை
ஆசையான வாழ்வும், களிப்பைத் தரும் மனைவியும், சுற்றத்தாரும், நண்பர்களும், குழந்தைகளும், வாழும் நாடும் ஊரும் நிலையானவை என்று நினைத்து அழியாமல், உன்னை வழிபடுவதே என் பணியாகக் கொள்ள அருள்வாயாக. இடப வாகனனாகிய சிவபெருமானது செவிகளில் உபதேசம் செய்தவரே.
தினைப் புனத்தில் காவல் புரிந்த வள்ளியின் பாதங்களைத் தரித்தவரே,இந்திரன் மகளான தேவசேனையின் கணவரே, பன்னரு புயங்களைக் கொண்டவரே, உன்னை நான் வழிபடுதலே என் பணி என்னும்படி அருள் புரிவாயாக.

ஒப்புக:
குறமகள் இருபாதம் தரித்த சேகர.........
• பணியா வென வள்ளிபதம் பணியுந்
தணியா அதிமோக தயாபரனே ...............................................................கந்தர் அனுபூதி
• வள்ளி பதம் பணியும்வேளைச் சுரபூபதி மேருவையே) ..........................கந்தர் அனுபூதி