Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    57. அபகார
    அபகார நிந்தைபைட் டுழலாதே
    அறியாத வஞ்சரைக் குறியாதே
    உபதேச மந்திரப் பொருளாலே
    உனைநானி னைந்தருட் பெறுவேனோ
    இபமாமு கன்தனக் கிளையோனே
    இமவான்ம டந்தையுத் தமிபாலா
    ஜெபமாலை தந்தசற் குருநாதா
    திருவாவி னன்குடிப் பெருமாளே.

    - பழநி

    பதம் பிரித்து உரை
    அபகார நிந்தை பட்டு உழலாதே
    அறியாத வஞ்சரை குறியாதே


    அபகார நிந்தை பட்டு = தீமை செய்ததினால் நிந்தனைகளுக்கு ஆளாகி. உழலாதே =அலையாமலும் அறியாத = (நன்னெறியை) கைக்கொள்ளாத. வஞ்சகரை = கயவர்களுடன் குறியாதே = இணங்குவதைக் கருதாமலும்.

    உபதேச மந்திர பொருளாலே
    உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ


    உபதேசப் பொருளாலே = (நீ எனக்கு அருளிய) உபதேச மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ = உன்னை நான் நினைந்து உன் திரு வருளைப் பெற மாட்டேனோ.


    இபமா முகன் தனக்கு இளயோனே
    இமவான் மடந்தை உத்தமி பாலா


    இபமா முகன் தனக்கு = யானை முகம் உடைய விநாயகருக்குஇளையோனே = தம்பியே இமவான் மடந்தை = இமய ராசன்மகளாகிய பார்வதி என்னும் உத்தமி பாலா = உத்தமியின் பிள்ளையே.


    ஜெமாலை தந்த சற் குரு நாதா
    திருவாவினன் குடி பெருமாளே.


    ஜெபமாலை தந்த சற் குரு நாதா = ஜெபமாலை ஒன்றை எனக்குத் தந்த சற்குரு நாதனே திருவாவினன்குடிப் பெருமாளே = திருவா வினன் குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.



Working...
X