54. விந்ததினூறி
விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி யினிமேலோ
விண்டிவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள் சுவாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே
- திருச்செந்தூர்
விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி யினிமேலோ
விண்டிவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள் சுவாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே
- திருச்செந்தூர்
சுருக்க உரை
சுக்கிலத்தில் ஊறி எடுத்தக் கோடிக் கணக்கான உடல்கள் வெந்து போக இனி மேலாவது உன்னை விட்டு நீங்காமல்,உன்னுடைய திருவடியை விரும்பும் கற்றோர்கள் போல அடியேனும் நல் வழிக்கு வந்து, பழைய வினைகள் தீரும்படி,வளப்பம் பொருந்திய சிவ ஞான வடிவை அடைந்து, என் பிறவிகள் என்னும் களைப்பு நீங்க உனது திருவடியைத் தந்து அருளுக.
என் உள்ளத்தின் உள்ளே ஒப்பற்ற செஞ்சோதியாக விளங்கி,என் கண்களில் பொலியும் உன் நெருப்பு நிறமான சடைகளை உடையவரும், என் தந்தையுமாகிய சிவபெருமான் பெற்ற பாலனே, அழகும், ஞானமும், மென்மையும் உடைய குறப் பெண்ணை அணைபவனே, அழகிய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தனே, தேவேந்திரர்களுக்குப் பெருமாளே, என் வினைகளும் பிறவிகளும் ஒழிய உன் திருவடிகளைத் தந்தருளுக.

விளக்கக் குறிப்புகள்
விஞ்சை – வித்தை. விஞ்சையர் – வித்வான், புலவர்.
அ. என் கண்ணில் ஆடு தழல் வேணி...
(கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின்
கருமணியே மணி ஆடு பாவாய் காவாய்)......................திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை 6.47.1.
(ஆறு திரு எழுத்தும் கூறு நிலைகண்டு
நின்தாள் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்)......................................................கல்லாடம் 50
ஆ. என் களை ஆற...
(எல்லாப் பிறபும் பிறந்து இளைதேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்)..............................திருவாசகம் (சிவபுராணம்)