Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    53. வரியார்


    வரியார் கருங்கண் மடமாதர்
    மகவா சைதொந்த மதுவாகி
    இருபோ துநைந்து மெலியாதே
    இருதா ளினன்பு தருவாயே
    பரிபா லனஞ்செய் தருள்வோனே
    பரமே சுரன்ற னருள்பாலா
    அரிகே சவன்றன் மருகோனே
    அலைவா யமர்ந்த பெருமாளே.

    - 53 திருச்செந்தூர்



    பதம் பிரித்து உரை


    வரி ஆர் கரும் கண் மட மாதர்
    மகவு ஆசை தொந்தம் அதுவாகி


    வரி ஆர் = இரேகைகள் உள்ள கரும் கண் = கரிய கண்கள் உடைய மட மாதர் = பேதமை பெண் களிடமும் மகவு = குழந்தைகளிடமும் ஆசை = ஆசையாகிய தொந்தம் = பந்தத்தில் அதுவாகி = ஆசைபட்டவனாகி


    இரு போது நைந்து மெலியாதே
    இரு தாளின் அன்பு தருவாயே


    இரு போதும் = இரண்டு வேளைகளிலும் நைந்து = மனம் வருந்தி மெலியாதே = நான் உடல் மெலிவு அடையாமல் இரு தாளின் அன்பு தருவாயே= உனது இரண்டு திருவடிகளின் மீது அன்பு தருவாயே = அன்பைத் தந்து அருளுக.


    பரிபாலனச் செய்து அருள்வோனே
    பரமேசுரன் தன் அருள் பாலா


    பரிபாலனம் செய்து அருள்வோனே = காத்து அளித்து அருள் வோனே பரம ஈசர் தன் அருள் பாலா= பரம சிவன் தந்தருளிய குழந்தையே


    அரி கேசவன் தன் மருகோனே
    அலைவாய் அமர்ந்த பெருமாளே.


    அரி கேசவன் தன் மருகோனே = அரி கேசவனாகிய திருமாலின் மருகனே ( கேசி எனற அரக்கனை கொன்றதனால் கேசவன்) அலை வாய் = திருச்சீரலைவாய் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.



Working...
X