52. வந்து வந்து
வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழங்கு ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சு தஞ்ச மென்று மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்ச
செஞ்ச தங்கை தங்கு பங்க யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு குந்து கண்டி றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்து
கந்த ரங்க லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு தம்பிரானே.
- 52 திருச்செந்தூர்
வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழங்கு ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சு தஞ்ச மென்று மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்ச
செஞ்ச தங்கை தங்கு பங்க யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு குந்து கண்டி றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்து
கந்த ரங்க லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு தம்பிரானே.
- 52 திருச்செந்தூர்
சுருக்க உரை
அடிக்கடி முன்னே தவழ்ந்து வந்து இன்பம் விளங்க நின்று,முலைப் பாலுக்கு அழுகின்ற குழந்தை, பூதலம் குலுங்க,விண்ணுலகம் வரை அளாவி எழுந்த மண்டபங்கள் கூடிய வீடு,பூங்கொத்துக்கள் நிறைந்த கூந்தல், குங்குமம் விளங்கும் கொங்கையை உடைய மனைவி, தனக்கு பற்றுக் கோடாக இருந்த அறிவு இவை யாவும் மங்கும் சமயத்தில், கோங்கு,அடம்பு, கடம்பு, செவ்விய சதங்கை ஆகியவை தங்கும் தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக.
சந்தனம், மந்தரம், கரும்பு, வாழை ஆகியவைகள் வான் அளாவி நிற்கும் திருச் செந்தூரில் வாழ்பவனே, காட்டைக் கடந்து சென்று, வள்ளி அம்மை இருந்த புனத்திற் சென்று, அவளைக் கண்டு வணங்கிய தலைவனே, யமன் நெருங்க அஞ்சும்படியாக அன்பர்கள் மனக் குகையில் வீற்றிருக்கும் தெய்வயானை சிறப்புடன் பொருந்தும் திருமார்பனே, தினைப் புனத்தில் உன் பொருட்டுப் புகுந்த உனது நண்பராகிய நாரதரும்,சிவபெருமானும், இந்திரன் முதலான தேவர்களும், அகத்தியரும் விரும்புகின்ற தம்பிரானே. சதங்கைகள் தங்கும் உன் திருவடிகளை எனக்குத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. மொஞ்சி = முலை. வெஞ் சுகம் = விருப்பமாகிய இன்பம். கொங்கு = கோங்கு. அடம்பு = ஒருவிதக் கொடிப்பூ. கந்த அரம்பை = கிழங்கோடு கூடிய வாழை. கந்தரம் = (அன்பர்களுடைய இருதயமாகிய குகை). அலம் = திருப்தி.
ஆ. புனம் புகுந்த நண்பர் ... = அரண்யவாசிகளாகிய தபோதனர்கள். நாரதர் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
(நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார் புகல் குறமாதை)………………………......................…...திருப்புகழ் (ஏவினைநேர்)
(சீலமு லாவிய நாரதர் வந்து உற்று
ஈதவள் வாழ்புன மாமென முந்தி)…………………..........................திருப்புகழ் (தோலொடுமூடி)
(நாலுவேத நவிற்று முறைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு)……………….....................…..திருப்புகழ் (ஆலகாலமென)