Announcement

Collapse
No announcement yet.

பழந்தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பழந்தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம் !

    தற்கால அவசர உலகில் சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. அவசர அவசரமாகவோ, அல்லது கையேந்தி பவனில் நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். உணவு உட்கொள்வது என்பது ஒரு கலை என்பது பலருக்கு நினைவில்லை .
    பிடிக்காதவரை என்ன கொட்டிக்கிட்டாச்சா ? என்று நக்கலாகவும் , ஏன்னா துன்னாச்சா? என்று சென்னைத்தமிழிலும் ,, சாப்பிட்டாச்சா ?
    என்று சற்று மரியாதையாகவும் கேட்பதை மட்டும் தற்போது அறிவோம் .

    ஆனால் பழந்தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
    நம் நினைவில் இப்போது இல்லை .
    உணவு வகையில்தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன.
    1. அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
    2. உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.
    3. உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
    4. குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
    5. தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
    6. துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
    7. நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
    8. பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
    9. மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
    10. கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
    11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
    12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

    இவ்வாறு உண்பதற்கு இத்தனை வகைகளை அறிந்து
    இத்தனை நாகரிகத்துடன் வாழ்ந்த நாம்இப்போதுஎங்கே போய்விட்டோம் ?இப்படி நம்மை மாற்றியது எது ?
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X