50.வஞ்சங்கொண்டு
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவே
குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங் கங்கா மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர் வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே
தஞ்சந்தஞ் சந்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
தந்தென்றின் பந்தரு வீடது தருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
மெங்கெங்கும் பொங்கம காபுநி
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே.
- திருச்செந்தூர்

சுருக்க உரை
வஞ்சக எண்ணத்துடன் வலிமை வாய்ந்த இராவணன் தனது பெரிய சேனைகளோடு வந்து, எதிர்த்து நின்று, தன் வலிமையைப் பற்றிய பெருமைப் பேசுக்களைப் பேசி, நாள் முழுதும் சண்டை செய்த போது, குரங்குப் படைகள் கோபக் கொண்டு, மலைகளைப் பிடுங்கி எறிந்து, அவன் சேனைகளைச் சிதற அடித்து, அரக்கர்கள் கூட்டம் முழுமையும் யம லோகம் செல்ல, இதைக் கண்ட, சில பேய்கள், விழுந்து கிடந்த,மாமிசம், கொழுப்பு முதலியவைகளை உண்டு, குதித்துக் கூத்தாடும்படி, சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற திருமாலின் மருகனே.
பெருமானே, சிறியனுடைய அறிவு மிகவும் அற்பமானது. எனக்கு நீயே அடைக்கலம். எனக்கு அருள் புரிந்து, நிலையான இன்பம் தரும் முத்தியைத் தருவாயே. சங்குகளும், தாமரையும்,கயல் மீன்களும் நிறைந்த குளங்கள் பொலிந்து விளங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே, இன்ப வீட்டைத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. கை = சேனை. துங்கல்கள் = மலைகள்.
அ. கை = சேனை. துங்கல்கள் = மலைகள்.