Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    50.வஞ்சங்கொண்டு


    வஞ்சங்கொண் டுந்திட ராவண
    னும்பந்தென் திண்பரி தேர்கரி
    மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை
    வந்தம்பும் பொங்கிய தாகஎ
    திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
    வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை
    மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
    ரங்குந்துஞ் சுங்கனல் போலவே
    குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி
    மிண்டுந்துங் கங்களி னாலெத
    கர்ந்தங் கங்கா மார்பொடு
    மின்சந்துஞ் சிந்தநி சாசரர் வகைசேர
    வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
    ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
    ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை
    உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
    டிண்டிண்டென் றுங்குதி போடவு
    யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே
    தஞ்சந்தஞ் சந்சிறி யேன்மதி
    கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
    தந்தென்றின் பந்தரு வீடது தருவாயே
    சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
    மெங்கெங்கும் பொங்கம காபுநி
    தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே.



    - திருச்செந்தூர்



    பதம் பிரித்து உரை


    வஞ்சம் கொண்டு திட ராவணனும்
    பந்து என் திண் பரி தேர் கரி
    மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை


    வஞ்சம் கொண்டு = வஞ்சக எண்ணம் கொண்டவனாய் திட ராவணனும் = வலிமை கொண்ட இராவணன் பந்து என் = பந்து போல திண் = வலிய பரி = குதிரை தேர் கரி = தேர், யானை மஞ்சின் பண்பும் சரியாம் என = மேக ஒழுங்குக்குச் சரியான வெகு சேனை= பெரிய சேனைகள் இவைகளுடன்


    வந்து அம்பும் பொங்கியதாக
    எதிர்ந்து தன் சம்பிரதாயமும்
    வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை


    வந்து = வந்து அம்பும் பொங்கியதாக = அம்பின் கூட்டங்கள் நிறைந்து எழ. எதிர்த்து = எதிர்த்து தன் சம்பிரதாயமும் = தனது சாமர்த்தியமான வம்பும் =பெருமைப் பேச்சும் தும்பும் = வீண் பேச்சும் பல பேசியும் = பலவற்றைப் பேசியும் எதிரே கை = எதிரில் உள்ள சேனையுடன்.


    மிஞ்சி என்றும் சண்டை செய் போது
    குரங்கும் துஞ்சும் கனல் போல
    வெகுண்டு குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி


    மிஞ்சு = மிகவும் என்றும் = நாள் முழுவதும் சண்டை செய் போது = சண்டை செய்த போது குரங்கு = குரங்கு (சேனைகள்) துஞ்சும் கனல் போலவே = நிலை பெற்ற நெருப்புப் போல வெகுண்டு = கோபம் கொண்டுகுன்றும் = மலைகளையும் கரடு ஆர் = கரடு முரடான மரம் அதுவும் வீசி = மரங்களையும் பிடுங்கி வீசி.


    மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து
    அங்கம் கம் கரம் மார்போடு
    மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும்


    மிண்டும் = பேர்ந்து எடுக்கப்பட்ட துங்கங்களினாலே =மலைகளினால் தகர்த்து = நெறுக்கி அங்கம் = உடல் உறுப்புக்கள் கம் = தலை கரம் = கைகள் மார்போடு =மார்பு இவைகளுடன் மின் = ஒளி விடும் சந்தும் =உடல் பொருத்தங்களையும் சிந்த = சிதற அடித்துநிசாசரர் = அசுரர்கள் வகை சேரவும் = இனங்கள் முழுமையும்.


    சண்டன் தென் திசை நாடி
    விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள்
    உந்து உந்து உந்து என்றிடவே தசை நிணம் மூளை


    சண்டன் = யமனுடைய தென் திசை நாடி விழுந்து =தென் திசையை நாடி விழவும். அங்கும் சென்று =அங்கும் போயும் யம தூதர்கள் = நமனுடையதூதுவர்கள் உந்து உந்து உந்து என்றிடவே = தள்ளு,தள்ளு, தள்ளு என்று கூறும்படியாக தசை =மாமிசம் நிணம் = கொழுப்பு மூளை = மூளை (இவைகளை).


    உண்டு கண்டு சில கூளிகள்
    டிண் டிண் டெண் என்று குதி போடவும்
    உயர்ந்த அம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே


    உண்டும் கண்டும் = உண்டும், பார்த்தும் சில கூளிகள்=சில பேய்கள் டிண் டிண் டென் என்று= இவ்வாறான ஒலிகளுடன் குதி போடவும் = குதித்துக் கூத்தாடவும்உயர்ந்த அம்பும் கொண்டு = சிறந்த அம்புகளைக்கொண்டு வெல் = வென்ற மாதவன் மருகோனே =திருமாலின் மருகனே.


    தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி
    கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள்
    தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே


    தஞ்சம் தஞ்சம் = (பெருமானே) அடைக்கலம், அடைக்கலம். சிறியேன் = சிறியேனுடைய மதி கொஞ்சம் கொஞ்சம் = அறிவு அற்பம், அற்பம் துரையே =துரையே அருள் தந்து = அருள் பாலித்து என்று =எப்போது இன்பம் தரு வீடது = பேரின்பம் தரும் மோட்ச வீட்டை தருவாயே = தந்தருள்வாய்


    சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம்
    எங்கெங்கும் பொங்க மகா புனிதம்
    தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே.


    சங்கம் = சங்குகளும் கஞ்சம் = தாமரையும் கயல் சூழ் =கயல் மீன்களும் உள்ள தடம் = குளங்கள் எங்கெங்கும் பொங்க = எல்லா இடங்களிலும் பொலிய மகா புனிதம் தங்கும் = மிக்க பரிசுத்தம் துலங்கும் செந்திலில் =திருச்செந்தூரில் வாழ் உயர் பெருமாளே = வாழ்ந்து ஓங்கும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    அ. கை = சேனை. துங்கல்கள் = மலைகள்.
Working...
X