49.மூளும்வினை
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதிபார
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடாரி தாய ஞேயங்க ளாய்நின்ற
மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன் லூடு போயொன்றி வானிங்க
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அம்தூறல்
நாடியதன் மீதி போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயனறி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளோ
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ டனல்வாயு
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து தொழுமாது
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி நாளின்சொல்
வாழுமுமைமாத ராள்மைந்த நேயெந்தை யிளையோனே
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற பெருமாளே.
- திருச்செந்தூர்

சுருக்க உரை
வினைகள் என்னைச் சூழ, ஐம்பூதங்களின் சேர்க்கையால் மாயைகள் என் மனத்தில் குவிய, நெறியான செயல்களைச் செய்யாமல், நான் விலை மாதர்களின் கொங்கைகள் மீது ஆசை கொண்டு, போகத்தை அனுபவிப்பவன். தேடுதற்கரியதும், ஞானத்தால் மட்டுமே உணரக் கூடிய பொருளாய் நிற்பதும், நான் சுவாசுக்கும் பிராணவாயு மூலாதாரத்தினின்று மேலே உள்ள ஆதாரங்களில் செலுத்தப்படும் யோக நெறியை மேற்கொண்டு, தியானத்தில் ஒன்றி, ஆனந்த மயமான பர ஆகாச வெளியில் ஏறிச் சென்று, நீ, நான் என்னும் வேற்றுமை எதுவும் இல்லாததுமான சூனிய நிலையில் வாழும் படியான பாக்கிய நிலையைப் பெறும் நாளும் உண்டோ?
விடத்தை உண்டவள், வேதத்தில் சொல்லப்பட்டவள், நீலி, கிரகங்களால் ஆயுள் முடியாமல் காலனை உதைத்த துர்க்கை, சிவபெருமான் இடப் பாகத்தில் உறைபவள், நாள் தோறும் அன்பர்கள் வந்து ஒழும் மாது,பூவுலகத்தைக் காப்பவள், திருமாலின் தங்கை ஆகிய பார்வதியின் மைந்தனே. குற்றமற்ற அடியார்கள் வாழும் இடங்களுக்குச் சென்று அங்கேயே வாழும் மயில் வீரனே. திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே. நீ வேறு நான் வேறு என்னும் அத்வைத நிலையில் நான் வாழ்வதும் ஒரு நாளோ?

ஞேயம் = ஞானத்தால் அறியப்படு பொருள்.
ஆலகால விஷம் அருந்தியது, மார்கண்டேயனுக்காக யமனை உதைத்தது எல்லாமே பார்வதி தேவிதான் என்பதாக குறிப்பிடுகிறார்
ஆலகால விஷம் அருந்தியது, மார்கண்டேயனுக்காக யமனை உதைத்தது எல்லாமே பார்வதி தேவிதான் என்பதாக குறிப்பிடுகிறார்