Announcement

Collapse
No announcement yet.

வைகாசி விசாகத்தின் மகத்துவம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வைகாசி விசாகத்தின் மகத்துவம்



    வைகாசி விசாகம் முருக பெருமானின் பிறந்த தினமாகும். வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாளில் வருவது முருக பெருமானின் பிறந்த நாள். முருக பக்தர்களால் ஆனந்தமாகக் கொண்டாடப்படுவது.

    வைகாசி விசாகம் ஜூன் 7, 2017


    விசாக நக்ஷத்திரம் மூன்று நக்ஷத்ரங்களின் சேர்க்கை ஆகும். ஒரு தோரணம் போல அமைப்பு கொண்டது. வானில் பிரகாசமாக ஒளிர்வது. இந்த நாளில் உலகிலுள்ள தீய சக்திகளை ஒழிப்பதற்காக உருவெடுத்தவரே முருகப் பெருமான்.

    முருகர் தோன்றிய கதை


    வைகாசி விசாகம் 2017 கொண்டாடுவதின் பின்னணி



    முருகர் சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் என்னும் அரக்க சகோதரர்களை அழிக்கப் பிறந்தவர். பிரம்மாவிடமிருந்து வரங்களைப் பெற்ற தாரகாசுரன் தேவர்களை கொடுமைக்கு உள்ளாக்கினான். அவனது சகோதரர்களும் அவனுக்கு சளைத்தவர்கள் இல்லை. இவர்களின் கொடுமையை நீக்க வேண்டி தேவர்கள் சிவ பெருமானிடம் வேண்டினார்கள்.

    சிவனும் தனது தவ வலிமையால் தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீ பொறிகளை வெளிப்படுத்தினார். அந்த பொறிகளின் வெப்பம் தாங்காமல் வாயு பகவானும் அக்னி பகவானும் அந்த தீ பொறிகளை கங்கை நதியில் கொண்டு சேர்த்தார்கள். கங்கை அந்த பொறிகளை சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தாள்.

    சரவண பொய்கை நாணல்களாலும் ,தாமரைகளாலும் நிரம்பப் பெற்றது. அங்கு முருக பெருமான் ஆறு குழந்தைகளாக ஆறு தாமரைகளில் தோன்றினார். அவரை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். அவர்களின் சேவைக்காக அவர்கள் இன்றும் சிவனருளால் ஆறு நக்ஷத்திரங்கள் சேர்ந்த நக்ஷத்திர படலமாக வானில் ஒளிர்கின்றனர்.

    அன்னை பார்வதி பின்னர் ஆறு குழந்தைகளையும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரு குழந்தையாக மாற்றி அவருக்கு ஒரு சக்திவேலும் பரிசளித்தார். அந்த வேல் கொண்டு முருகர் சூரபத்மனை அழித்த கதை நாம் அறிந்ததே.

    வைகாசி விசாகத்தின் மகத்துவம்

    வைகாசி விசாகம் முருகனின் பிறந்த தினமாகும்.

    இந்த நாளில் முருகன் தனது அற்புத சக்தியை முழுமையாக வெளிப்படுத்துகிறார். இந்த நாளில் நாம் அவரை வேண்டினால் இறை அருளும் ஆன்மீக பலமும் கிட்டும் .

    முருகன் தீய சக்திகளை அழிக்க அவதாரம் எடுத்தவர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவர்.

    முருக கடவுள் ஞானத்தின் இருப்பிடம் . அறிவின் உறைவிடம் . முருகனை வைகாசி விசாகத்தன்று வணங்கினால் வாழ்வு ஆன்மீக ஒளி பெற்று திகழும் என்பதில் ஐயமில்லை.

    வைகாசி விரதமிருக்கும் முறை


    வைகாசி விரதம் ஏகாதசி விரதம் போன்றது. முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் உண்ணலாம்.

    இன்றைய தினம் திருமணம் ஆகாதவர்களும் குழந்தை இல்லாதவர்களும் விரதமிருந்தால் திருமணப் பேறு , குழந்தை பேறு கிட்டுவது நிச்சயம்.

    விரதமிருக்கும் பெண்டிர் குடை, தண்ணீர், மோர், உணவு ஆகியவற்றை தானமாக அளித்தால் புண்ணியம் உண்டு.

    வைகாசி விசாகம் அன்று முருகனின் திரு உருவத்தை அரை நிமிடம் த்யானித்தால் நம் வாழ்வில் வளமெல்லாம் கிடைக்கும் என்கிறார் அருணகிரிநாதர்.

    அகஸ்திய மாமுனி கூறுவது போல செவ்வரளி மலர்களை முருகன் திருவடியில் சமர்ப்பித்துவணங்கினால் நன்மை பல கிடைக்கும்.

    நாகலிங்க மலர்கள் கொண்டும் முருகனை இந்த தினத்தில் வணங்கினால் விசேஷம். நாகலிங்க மலர்களை சமர்ப்பிப்பதோடு உணவை தேவையானவர்களுக்கு வழங்குவது நன்மை பயக்கும்.

    முருகனை வணங்கி சுப்பிரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.

    சரவணபவ என்னும் மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. அதன் சக்தி நமது பாபங்களை தொலைக்க உதவும்.

    கோயில்களில் வைகாசி விசாகம் கொண்டாடும் முறை

    முருகன் கோயில் கொண்டுள்ள அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் பத்து நாள் திருநாளாக ப்ரம்மோத்சவமாக கொண்டாடப்படுகிறது.

    பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.

    பக்தர்கள் முருகன் கோயில்களை கிரிவலம் வருவது வழக்கம்.

    இந்த நாளில் முருக ஸ்தலங்களில் முருகன் வள்ளி திருமணம் நடத்துவது வழக்கம்.

    முருகனின் சிறப்பு குணாதிசயங்கள்


    முருகன் அறுமுகத்தோடுதிகழ்பவர்.ஆறுமுகன் எனவும் ஷண்முகன் எனவும் பெயர் பெற்றவர்.

    தகப்பனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்து தகப்பன்சாமி எனப் பெயர் பெற்றவர். இவருக்கு சுவாமிநாதன் எனவும் பெயர் உண்டு
    .
    கார்த்திகை பெண்டிரால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றவர்.

    இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டு அருமையான குணாதிசயங்களை பெற்றவர்.

    அழகுக்கும் இளமைக்கும் பெயர் போனவர் முருகர். தமிழ் இலக்கியத்தை போற்றி காப்பவர்.

    ஞானத்தை நமக்கு அளிப்பவர். ஆன்மீக ஒளி அருளுபவர்.

    போர் கடவுள். எதிரியை துண்டு துண்டாக்கும் ஆன்மீக சக்தியை அளிப்பவர்.

    வைகாசி விசாகம் அன்று கந்த கடவுளை வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுவோம்.

    நாங்கள் ஹோமம் மற்றும் கோயில் சேவைகளை திறம்பட செய்து தருகிறோம். எங்கள் புரோஹிதர் சேவைகளால் பயன் பெற எங்களை இணைய தளம் மூலம் அணுகுங்கள்.

    Best Homam Services Chennai
    AMA Vedic Services
Working...
X