48. மூப்புற் று
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர ருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் பெருமாளே.
- திருச்செந்தூர்

சுருக்க உரை
முதுமை அடைந்து, செவிடாகி, பெரு மூச்சு விட்டுக் கொண்டு,நிலை தடுமாறி, கோபம் அதிகமாகும்படி பேசி, நெஞ்சில் கோழை மிகுந்து, துன்பம் உண்டாகி வருத்தும் இவ்வுடலில் புகுந்து, என் உயிர் அலைவதற்கு முன், நமன் செயலினின்று என்னை விடுவித்து, உனது திருவடியில் சேர்த்து அருள் புரிவாயாக.
பூமிக்குக் காவலாயிருக்கும் மேரு மலையை வளைத்து,பகைவர்களின் அரண்களை அழித்த சிவபெருமானுக்குக் குரு நாதனே. காட்டுக்குள் வள்ளி நாயகியிடம் வஞ்சகச் சொற்களைப் பேசித் தன்னை காத்தருள வேண்டிக் கொண்டவனே. செழிப்பான தமிழ் அகப் பொருள் துறையின் உறுதியான உண்மை விளக்கத்துக்கு உருத்திர சன்மராய் வந்து உதவிய முருகனே. சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாத கடவுளே. கடலால் சூழப்பட்ட திருச்செந்தூரில் அழகுடன் அமர்ந்துள்ள பெருமாளே. கூற்றத் தத்துவம் நீங்கி உன் திருவடியில் என்னைச் சேர்த்துக் கொள்க.

விளக்கக் குறிப்புகள்
அ. இனா பிச்சு ஏற்றிடு = துன்பம் உண்டாக்கி வருத்தும்.
ஆ. கூற்றத் தத்துவம்....
உடல் வேறு, உயிர் வேறாகக் கூறுபடுத்தும் யம வேதனை.
இ. காப்புப் பொற்கிரி = மேரு. இந்த மலை பூமிக்கு இருசு எனப்படும்.
ஈ. மார்க்கம் = அகப் பொருள் துறை. (இலக்கண விளக்கம் 583). இறையனார் அகப் பொருளுக்கு உரை கண்டு, தாம் தாம் எழுதிய பொருளே சரி என்று சங்கப் புலவர்கள் கலகமிட, முருகன், சிவபெருமான் ஆணைப்படி, உருத்திர சன்மர் என்னும் பெயருடன் ஊமைப் பிள்ளையாக வணிகர் குலத்தில் தோன்றிச் சங்கத்தில் வீற்றிருந்து புலவர்களின் உரையைக் கேட்டார். நக்கீரர் உரையை மட்டும் வியந்து முருகன் புலவர்களுக்கு அதைத் தெளிவு படுத்தினார்.
(தமிழ்த் த்ரயமத் திலகப் பொருள் வ்ருத்தியினைப்
பழுதற் றுணர்வித் தகசற் குருநாதா).............................................திருப்புகழ் (கடலைச்சி).
(ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா)............................................திருப்புகழ் (சீரானகோல).
(உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற் கவிப்பணர்
ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை பெருமாளே)........................திருப்புகழ் (வழக்குச்சொற்).
உ. சித்திரம் = இரகசியம்.
ஊ. காப்புக் குத்திரம் மொழிவோனே..
வள்ளியிடம் இங்ஙனம் முருகவேள் வஞ்சகமாகக் கூறியது.
(மமதை விட்டு ஆவி உய்ய அருள் பாராய்).......................................திருப்புகழ் (ஆனாதபி).