Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    47. முனைச்செங்கோடு


    வினைச்சண் டாளனை வீணனை நீணிதி
    தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
    விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி பகராதே
    விகற்பங் கூறிடு மோகவி காரனை
    அறத்தின் பாலொழு காதமு தேவியை
    விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ
    முனைச்சங் கோலிடு நீலம கோததி
    அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
    முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் மருகோனே
    முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
    திரைக்கங் காநதி தாதகி கூவிள
    முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு முருகோனே
    தினைச்செங் கானக வேடுவ ரானவர்
    திகைத்தந் தோவென வேகணி யாகிய
    திறற்கந் தாவளி நாயகி காமுறும் எழில்வேலா
    சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
    நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
    திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் பெருமாளே.



    -திருச்செந்தூர்



    பதம் பிரித்து உரை
    ****
    வினை சண்டாளனை வீணனை நீள் நிதி
    தனை கண்டு ஆணவமான நிர்மூடனை
    விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே


    வினைச் சண்டாளனை = மிக்க சண்டாளனை வீணனை= வீணனை நீள் நிதி தனைக் கண்டு = பெரியசெல்வமுடைமையைக் கண்டு ஆணவமான = ஆணவம் கொண்ட நிர் மூடனை = முழு மூடனை விடக்கு =மாமிசத்தை அன்பாய் = ஆசையுடன் நுகர் =உண்கின்ற பாழனை = பாழானவனை ஓர் மொழி =ஒப்பற்ற ஆறெழுத்து மந்திரத்தை பகராதே =சொல்லாமல்.


    விகற்பம் கூறிடு மோக விகாரனை
    அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை
    விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள் பெறுவேனோ


    விகற்பம் = மாறுபட்ட பேச்சுக்களையே கூறிடும் = பேசுகின்ற மோக விகாரனை = காம விகாரனை அறத்தின் பால் ஒழுகாத = அற நெறியல்ஒழுகாதமுதேவியை = மூதேவியாகிய என்னை விளித்து =அழைத்து உன் பாதுகை நீ தர = உனது பாதுகையை நீ கொடுக்க நான் அருள் பெறுவேனோ = நான் திருவருளைப் பெறுவேனோ


    முனை சங்கு ஓலிடு நீல மகா உததி
    அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல
    முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே


    முனைச் சங்கு = மூக்கை உடைய சங்குகள் ஓலிடு =ஒலிக்கின்ற நீல = நீல நிறம் கொண்ட மகா உததி =பெரிய கடலை அடைத்து = அடைத்து அஞ்சாத இராவணன் = அஞ்சுதல் இல்லாத ராவணனுடைய. நீள்= நீண்ட பல முடிக்கு = பல முடிகளும் (வீழ) அன்று ஓர் கணை ஏவும் = அன்று ஓப்பற்ற அம்பைச் செலுத்திய இராகவன் மருகோனே = இராமனுடைய மருகனே.


    முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி
    திரை கங்கா நதி தாதகி கூவிள
    முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே


    முளைக்கும சீதள நிலாவொடு = குளிர்ந்த வளர் பிறைச்சந்திரனோடு அரா = பாம்பையும் விரி திரைக் கங்கா நதி = விரிந்து மோதும் கங்கை நதியையும் தாதகி = ஆத்திப் பூவையும் கூவிளம் = வில்வத் தையும்முடிக்கும் சேரர் = முடியில் தரிக்கும் சிவ பெருமானின்.பேரருளால் வரும் முருகோனே = பேரருளால் தோன்றிய முருகோனே.


    தினை செம் கானக வேடுவர் ஆனவர்
    திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய
    திறல் கந்தா வ((ள்)ளி நாயகி காமுறும் எழில் வேலா


    தினைச் செம் கானக = தினைப் புனத்திலிருந்த
    செவ்விய காட்டு வேடுவரானவர் = வேடர்கள்.திகைத்து = திகைப்புற்று அந்தோ எனவே = இதென்ன ஆச்சரியம் என்று கூறும்படியாக கணி ஆகிய =வேங்கை மரமாய் நின்ற திறல் = திறமை வாய்ந்தகந்தா = கந்தனே வ(ள்)ளி நாயகி காமுறும் = வள்ளிநாயகி ஆசைப்படும் எழில் வேலா = அழகிய வேலனே.


    சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில்
    நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய
    திரு செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே.


    சிறக்கும் தாமரை ஓடையில் = சிறந்த தாமரை ஓடையிலும் மேடையில் = மேடையிலும் நிறக்கும் சூல்= நிறைந்த கர்ப்பம் கொண்ட வளை= சங்குகள் பால் மணி விசிய = வெண் மணிகளை வீசுகின்ற திருச் செந்தூர் வரு சேவகனே = திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பராக்கிரமசாலியே சுரர் பெருமாளே= தேவர்கள் பெருமாளே.








    விளக்கக் குறிப்புகள்


    அ தினைச் செங்கானக வேடுவரானவர்.....
    (குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
    கரடிபுலி திரிகடிய வாரான கானின்மிகு
    குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் குன்றுலாவி)- திருப்புகழ்
    (உறவின்முறைகதறி)
Working...
X