46.முந்துதமிழ்
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்தன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போதுவருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேளைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொல டியார்கள் வாரக் கார எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூரைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.
- திருச்செந்தூர்
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்தன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போதுவருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேளைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொல டியார்கள் வாரக் கார எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூரைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.
- திருச்செந்தூர்
சுருக்க உரை
மொழிகளுக்குள்ளே முற்பட்டதாய் விளங்கும் தமிழ்ப் பாமாலைகளைக் கோடிக் கணக்கில் சந்தப் பாக்களாகப் பாடிப் பாடி, அழிவுறும் மக்களின் வீடுகளைத் தேடித் தேடித் திரியாமலும், என் பழ வினைகள் என்னைத் தொடராமல் ஓடிப் போகவும், பெண்ணாசை அறவே நீங்கவும், முன் அடிமையாகிய என் முன்னிலையில், நடனம் செய்யும் மயில் மீது ஏறி வந்து,நன்மை புரியும் பார்வையையும், தீரத்தையும் நான் காண எப்போது வருவாய்?
வேதவேள்விகளுக்குக் காவல் புரிபவனே. தழிழ்ப் பாமாலைகளை அணிபவனே. தேவர்களுக்கு உபகாரியே. சேவற் கொடியோனே. உன்னைத் தொழும் அடியார்களிடம் அன்பு பூண்டவனே. கிரவுஞ்ச மலை ஊடுருவும்படி ஏவிய வேல் கரத்தினே. அழகுடைய உருவம் கொண்டவனே. தேவசேனை விரும்பும் போகம் வாய்ந்தவனே. வள்ளியுடன் பொழுது போக்கும் மெய்க்காவல் காரனே. செவ்விய சொற்களால் போற்றும் அடியார்கள் மீது அன்பு கொண்டவனே. எதிர்த்து வந்த அசுரர்களை மாய்க்கும் மாயக்காரனே. சூரனைக் கொன்றவனே. திருச்செந்தூரில் வெற்றிருக்கும் பெருமாளே. செம்பொன் மயில் மீது நீ எப்போது வருவாயோ.

விளக்கக் குறிப்புகள்
அ. முந்து தமிழ் மாலை....
வட மொழிக்கும் தென் மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானே ஆவர். வட
மொழியைப் பாணினிக்கும், தென் மொழியை அகத்தியனுக்கும் சிவ
பெருமான் உபதேசித்தார்.
(ஆரியம் தமிழோடு இசை ஆனவன்)...திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை5.18.3.
(ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்)திருநாவுக்கரசர் தேவாரத்திருமுறை 6.23.5.
(வடமொழியும் தென்மொழியும் மறைகள் நான்கும் ஆனவன் காண்)...
…………………………………….....திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை 6.87.1.
ஆ. முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி....
(வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி, கோவை, தூது பலபாவின்)…………………...திருப்புகழ் (வஞ்சகலோப).
இ. முந்தை வினையே வராமற் போக....
(நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும டங்கல்வேலா)...........................திருப்புகழ் (ஆறுமுகம்).
(வினையோட விடுங் கதிர்வேலா)………………………………....கந்தர் அனுபூதி.
ஈ. முந்தடிமை யேனை...
(பழைய நினது வழியடிமையும் விளங்கும் படிக்கினி துணர்த்தி
யருள்வாயே)...................................................திருப்புகழ் (அகரமுதலென).

.
முந்து தமிழ் மாலை' என்று அருணகிரிநாதர் கூறுகிறாரே... இதன் பொருள்?
உள்ளத்தின் சிந்தனையை வெளிப்படுத்த உதவுவது மொழி. அந்த மொழியில் இனிமை வேண்டும். கரடுமுரடாக இருக்கக்கூடாது. நான்கு பேர் நடந்து செல்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் ஒல்லியாக இருக்கிறான். ஏனையோர் கனமாக உள்ளனர். இவர்களில் ஒல்லியானவன் தான் வேகமாக நடைபோடுவான். மொழிகள் எல்லாம் இறைவனை நோக்கிப் பயணம் செய்யுமானால் அவற்றில் தமிழ்தான் முந்திச் செல்லும். அதன் மென்மைதான் காரணம். அதனால்தான் ``முந்து தமிழ் மாலை கோடிக்கோடி'' என்று பாடினார் அருணகிரிநாதர் – வாரியார்