45. மனத்தின்
மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந்
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
திறத்தின்தண் டெடுத்தண்டங்
கிழியத்தின்றிங் குறத்தங்கும் பலவோரும்
எனக்கென்றிங் குனக்கென்றங்
கினத்தின்கண் கணக்கென்றன்
றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிற்பங்கங்
கெடத்துன்பங் கழித்தின்பந் தருவாயே
கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண்
பனைத்துங்குன் றிடச்சந்தங்
களிக்குஞ்சம் புவுக்குங்செம் பொருளீவாய்
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
சிறுப்பெண்குங் குமக்கும்பந்
திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
பொழிற்றண்செந் திலிற்றங்கும் பெருமாளே.
- திருச்செந்தூர்
மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந்
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
திறத்தின்தண் டெடுத்தண்டங்
கிழியத்தின்றிங் குறத்தங்கும் பலவோரும்
எனக்கென்றிங் குனக்கென்றங்
கினத்தின்கண் கணக்கென்றன்
றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிற்பங்கங்
கெடத்துன்பங் கழித்தின்பந் தருவாயே
கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண்
பனைத்துங்குன் றிடச்சந்தங்
களிக்குஞ்சம் புவுக்குங்செம் பொருளீவாய்
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
சிறுப்பெண்குங் குமக்கும்பந்
திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
பொழிற்றண்செந் திலிற்றங்கும் பெருமாளே.
- திருச்செந்தூர்
சுருக்க உரை
ஐம்புலன்களோடு சம்பந்தப்பட்ட என் குணமும்,ஐம்பொறிகளின் பிணிப்பும் சிதறிப் போக, யமன் நெருப்பு மிக்கு எழும் வலிமையுடன் தண்டாயுதத்தை எடுத்து என்னிடம் வர, என் சுற்றத்தினர் பலரும் தத்தம் பங்குக்காக கணக்குக் கேட்டு வாதாட, என் அன்பும் கெட்டு, என் உடல் அழிந்து போவதற்கு முன், செந்தமிழ் கொண்டு பொருள் உள்ளோரிடம் இரக்கும் குற்றமும், துன்பமும் ஒழிந்து, பேரின்பத்தைத் தந்தருளுக.
கடலில் அறி துயில் கொள்ளும் சங்கம் ஏந்திய திருமாலும்,பிரமனும், சந்தப் பாடல்களை விரும்பிக் கேட்கும் சிவபெருமானும் களிக்க மூலப் பொருளை உபதேசித்தவனே, தினை வளரும் வள்ளி மலையில் தங்கியிருந்த வள்ளியின் அழகிய கொங்கைகளை என்றும் புனைந்து அருள்பவனே, கடல் சங்குகளைக் கொழிக்கும் பசுஞ் சோலைகள் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே, என் துன்பங்கள் ஒழிந்து இன்புற அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. மனத்தின் பங்கெனத் தங்கும் ஐம்புலன்....
மனம் செல்வதற்கு வேறு வேறு வாயில்களாகப் பொருந்தி இருக்கும் ஐம்புலன்கள்.
ஆ. எங்கும் கலக்கம் சிந்திடக் கண் துஞ்சிடும் மாலும்...
உலகத்தோர் கலக்கம் அற்று வாழ அறி துயில் கொள்ளும் திருமால்.