Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    44. மங்கை சிறுவர்


    மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
    வந்து கதற வுடல்தீயின்
    மண்டி யெரிய விண்டு புனலில்
    வஞ்ச மொழிய விழஆவி
    வெங்கண் மறலி தன்கை மருவ
    வெம்பி யிடறு மொருபாச
    விஞ்சை விளையு மன்று னடிமை
    வென்றி யடிகள் தொழவாராய்
    சிங்க முழுவை தங்கு மடவி
    சென்று மறமி னுடன்வாழ்வாய்
    சிந்தை மகிழ அன்பர் புகழு
    செந்தி லுறையு முருகோனே
    எங்கு மிலகு திங்கள் கமல
    மென்று புகலு முகமாதர்
    இன்பம் விளைய அன்பி னணையு
    மென்று மிளைய பெருமாளே.



    - திருச்செந்தூர்

    பதம் பிரித்து உரை


    மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
    வந்து கதற உடல் தீயில்


    மங்கை = மனைவி சிறுவர் = மக்கள் தங்கள் கிளைஞர் =தம் உறவினர் வந்து கதற = வந்து கதறி அழ உடல் தீயில் = உடல் நெருப்பில்


    மண்டி எரிய விண்டு புனலில்
    வஞ்சம் ஒழிய விழ ஆவி


    மண்டி எரிய = சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க விண்டு = (உறவினர்கள் யாவரும் சுடு காட்டை விட்டு) நீங்க புனலில் = நீரில் வஞ்சம் ஒழிய = (பந்தம் என்னும்) மாயம் ஒழியும்படி விழ = படிந்து குளிக்க ஆவி = உயிர்


    வெம் கண் மறலி தன் கை மருவ
    வெம்பி இடறும் ஒரு பாச


    வெம் கண் மறலி = கொடிய கண்களை உடைய யமனது தன் கை மருவ = கையில் சிக்கிக் கொள்ளவெம்பி இடறும் = மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பாசம் = பற்று எனப்படும்.


    விஞ்சை விளையும் அன்று உன் அடிமை
    வெ(ற்)றி அடிகள் தொழ வாராய்


    விஞ்சை விளையும் = மாயக் கூத்து நிகழ்கின்ற அன்று =அந்த நாளில் உன் தன் அடிமை = உனது அடிமையாகிய நான் வெற்றி அடிகள் தொழ வாராய் =வெற்றித் திருவடிகளைத் தொழ வந்தருள்வாயாக.


    சிங்கம் உழுவை தங்கும் அடவி
    சென்று மற மின்னுடன் வாழ்வாய்


    சிங்கம் உழுவை தங்கும் = சிங்கம், புலி தங்குகின்றஅடவிசென்று = காட்டுக்குப் போய மற மின்னுடன் வாழ்வாய் = குறப் பெண்ணா கிய வள்ளியுடன் வாழ்கின்றவனே.


    சிந்தை மகிழ அன்பர் புகழும்
    செந்தில் உறையும் முருகோனே


    சிந்தை மகிழ = மனம் மகிழ்கின்ற அன்பர் புகழும் =அடியார்கள் புகழ்கின்ற செந்தில் உறையும் முருகோனே = திருச் செந்தூரில் வீற்றிருக்கும் முருகனே.


    எங்கும் இலகும் திங்கள் கமலம்
    என்று புகலும் முக மாதர்


    எங்கும் இலகும் = எவ்விடத்திலும் விளங்குகின்றதிங்கள் = சந்திரன் (என்னும்படியும்) கமலம் என்றும் =தாமரை என்னும்படியும் புகலும் = (உவமை) சொல்லப்படும் முக மாதர் = முகத்தை உடைய மாதர்களாகிய வள்ளியும்
    தேவசேனையும்.


    இன்பம் விளைய அன்பில் அணையும்
    என்றும் இளைய பெருமாளே.


    இன்பம் விளையும் = இன்பம் பெருக அன்பில் அணையும் = அன்போடு அணைகின்ற (பெருமாளே) என்றும் இளைய பெருமாளே = என்றும் இளமை விளங்க
    இருக்கும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    அ. மங்கை சிறுவர்...
    மங்கை... மனைவி என்னும் பொருளில் வந்துள்ளது.
    (மங்கை அழுது விழவே யம படர்கள்)...திருப்புகழ் (தொந்திசரிய).


    ஆ. என்றும் இளைய பெருமாளே...
    (என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே)...திருமுருகாற்றுப்படை
    (தனிப்பாடல்).


    இ. புனலில் வஞ்சம் ஒழிய விழ....
    பிணத்தை எரிய விட்டுச் சுடு காட்டை விட்டகன்று நீரில் குளித்தவுடன் பந்த பாசம்
    விலகுகின்றது என்பது கருத்து.
    (நீரில் படிந்துவிடு பாசத் தகன்றுனது)...திருப்புகழ் (இத்தாரணிக்கு).
    (ஊரெங்கும் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே)...திருமந்திரம் 189.
Working...
X