44. மங்கை சிறுவர்
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற வுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு மொருபாச
விஞ்சை விளையு மன்று னடிமை
வென்றி யடிகள் தொழவாராய்
சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு முருகோனே
எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய பெருமாளே.
- திருச்செந்தூர்
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற வுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு மொருபாச
விஞ்சை விளையு மன்று னடிமை
வென்றி யடிகள் தொழவாராய்
சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு முருகோனே
எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய பெருமாளே.
- திருச்செந்தூர்
சுருக்க உரை
இறந்த பின் மனைவி, மக்கள், உறவினர் யாவரும் கூடி கதறி அழ,உடல் சுடு காட்டில் நெருப்பில் எரிந்து கொண்டிருக்க, வந்தவர்கள் நீரில் பந்தம் என்னும் மாயம் ஒழியக் குளித்துச் செல்ல, யமன் தன் பாசக் கயிற்றால் இழுக்கும் கூத்து நிகழ்வதற்கு முன் உன் திருவடிகளை நான் தொழும்படியாக என் முன் வந்து அருள வேண்டுகிறேன்.
கொடிய விலங்குகள் வாழும் காட்டுக்குச் சென்று, வேடப் பெண் வள்ளியுடன் வாழ்ந்தவனே, சிந்தை மகிழ அன்பர்கள் புகழும் திருச்செந்தூரில் உறையும் முருகனே, யாவரும் புகழும் தாமரை போன்ற முகம் உடைய வள்ளியும், தேவசேனையும் இன்பம் பெருக அணையும் பெருமாளே, என்றும் இளமையோடு விளங்கும் பெருமாளே, உன் வெற்றித் திருவடிகளைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்
அ. மங்கை சிறுவர்...
மங்கை... மனைவி என்னும் பொருளில் வந்துள்ளது.
(மங்கை அழுது விழவே யம படர்கள்)...திருப்புகழ் (தொந்திசரிய).
ஆ. என்றும் இளைய பெருமாளே...
(என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே)...திருமுருகாற்றுப்படை
(தனிப்பாடல்).
இ. புனலில் வஞ்சம் ஒழிய விழ....
பிணத்தை எரிய விட்டுச் சுடு காட்டை விட்டகன்று நீரில் குளித்தவுடன் பந்த பாசம்
விலகுகின்றது என்பது கருத்து.
(நீரில் படிந்துவிடு பாசத் தகன்றுனது)...திருப்புகழ் (இத்தாரணிக்கு).
(ஊரெங்கும் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே)...திருமந்திரம் 189.