43. பூரண வார
பூரண வாரகும்ப சீதப டீரகொங்கை
மாதர் விகாரவஞ்ச லீலையி லேயுழன்று
போதவ மேயிழந்து போனது மானமென்ப தறியாத
பூரிய னாகிநெஞ்சு காவல்ப டாதபஞ்சு
பாதக னாயறஞ்செ யாதடி யோடிறந்து
போனவர் வாழ்வுகண்டு மாசையி லேயழுந்து மயல்தீரக்
காரண காரியங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதைவிண்டு பாவக மாயிருந்து
காலுட லூடியங்கி நாசியின் மீதிரண்டு விழிபாயக்
காயமு நாவுநெஞ்சு மோர்வழி யாகஅன்பு
காயம் விடாம லுன்ற னீடிய தாள்நினைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்விளங்க அருள்வாயே
ஆரண சாரமந்த்ர வேதமெ லாம்விளங்க
ஆதிரை யானைநின்று தாழ்வனெ னாவணங்கு
மாதர வால்விளங்கு பூரண ஞானமிஞ்சு முரவோனே
ஆர்கலி யூடெழுந்து மாலடி வாகிநின்ற
சூரனை மாளவென்று வானுல காளுமண்ட
ரானவர் கூரரந்தை தீரமு னாள்மகிழ்ந்த முருகேசா
வாரண மூலமென்ற போதினி லாழிகொண்டு
வாவியின் மாடிடங்கர் பாழ்பட வேயெறிந்த
மாமுகில் போலிருண்ட மேனிய னாமுகுந்தன் மருகோனே
வாலுக மீதுவண்ட லோடிய காலில்வந்து
சூல்நிறை வானசங்கு மாமணி யீனவுந்து
வாரிதி நீர்பரந்த சீரலை வாயுகந்த பெருமாளே.
- திருசெந்தூர்

சுருக்க உரை
கச்சு அணிந்த, கும்பம் போன்ற கொங்கைகளை உடைய விலை மாதார்களின் ஆடல், பாடல்களில் அலைப்புண்டு, மானம் இழந்து, கீழ் மகனாகி, பெரிய பாதகங்களைச் செய்தனவனாகி, தருமம் செய்யாமல்,அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைக் கண்டும், காம ஆசையால் மூழ்கியுள்ள என் மயக்கம் தீரும்படி, செயலற்று, நான் என்னும் ஆணவம் நீங்க, தியானத்தில் நிலைத்து நின்று, மனம், வாக்கு,காயம் இவை மூன்றும் ஒரு வழிப்பட, உனது இரு திருவடிகளை நினைந்து, அக் காட்சியைப் பெறுவதற்கு தவம் செய்யும் யோகிகளைப் போல நானும் விளங்கும்படி அருள் புரிவாயாக.
வேதக் கருத்துக்கள் யாவும் விளங்கும்படியாக, தேவாரப் பாக்களால்,திருவாதிரை நாளை உகந்துள்ள சிவபெருமானை நான் வணங்குவேன் என்று உலகுக்குக் காட்டிய ஞானம் மிக்க ஞானசம்பந்தராகிய பெருமானே, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை வென்று,வானுலகைத் தேவர்கள் ஆளும்படி முன்பு அவர்களுக்கு உதவு செய்தவனே, மடுவில் முதலையால் பீடிக்கப்பட்ட யானை ஆதி மூலமே எனவும் உடனே வந்து உதவிய திருமாலின் மருகனே, வெண் மணலின் மீது வண்டல் ஓடிய வாய்க்கால் வழியாக வந்து, சங்குகள் முத்து மணிகளைப் பெறும்படியாக கடல் நீர் பரந்துள்ள திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் தவ யோகியாய் விளங்க அருள் புரிவாய்.

விளக்கக் குறிப்புகள்
அ. ஆதிரையானை நின்று தாழ்வன்...
(ஆடனல் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே)...சம்பந்தர் தேவாரத் திருமுறை1.105.1.
சிவனே முருகனாதலால், முருகவேள் சம்பந்தாராய்ப் பாடியது உலகுக்கு எடுத்துக்
காட்டு. (நிருமலன் எனது உரை தனது உரை ஆக)...சம்பந்தர் தேவாரத் திருமுறை
1,76.2.

ஞான சம்பந்த பெருமானாய் வந்த ஞான தேசிகனே, சூரனைக் கொன்று வானவர் துன்பத்தைத் துடைத்த முருகப் பெருமானே, கஜேந்திரவரதாகிய கருமுகில் வண்ணரது மருகனே, செந்தில் ஆண்டவனே, நான் என்கின்ற தற்போதத்தை விட்டு விழிநாசி வைத்து ஒரு வழிப்பட்டு சிவயோகியாக அடியேன் விளங்க திருவருள் கேட்டு பாடிய துதி