42. புகரப் புங்க
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் தரவேணும்
தகரத் தந்தத் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.
-திருச்செந்தூர்
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் தரவேணும்
தகரத் தந்தத் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.
-திருச்செந்தூர்
சுருக்க உரை
புள்ளிகளை உடையதும், உயர்ந்ததும், அழகானதுமான வெள்ளை யானை மீதும், மேகத்தின் மீதும் விளங்கும் இந்திரனும், வேதத் தொகுதிகளின் பொருளை முறையாகச் சொல்லும் பிரமனும், ஆதி சேடன் மீது துயிலும், சக்கரம் ஏந்திய திருக்கையை உடைய திருமாலும்,உபதேசப் பொருள் கிடைக்காமல் கலங்கி நிற்க, அந்தத் தனிப் பொருளை எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.
தகர வித்தை என்னும் வேதாசார முடியாகிய ப்ரும ஸ்தானத்தில் பொருந்தி, நல்ல இருதய கமலம் என்னும் இடத்தில் உறைபவனே. இளம் கொங்கை உடைய வள்ளிக்கு இன்பம் அளித்து அருளியவனே. கிரவுஞ்ச மலை சிதறிட வேலைச் செலுத்தியவனே. உயர்ந்த மதில்கள் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே. கந்தப் பெருமாளே. என் உள்ளம் தெளிய உபதேசம் அளிக்க வேண்டுகிறேன்.

விளக்கக் குறிப்புகள்
அ. தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தட....
தகரம் = இருதயத்தின் உள்ளிடம். தகர வித்தை = இறைவனைப் ப்ரும்ம ஸ்தானத்தில் (தகரகாசத்தில்) வைத்துத் தியானம் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை.
ஆ. தட நல் கஞ்சம் = இருதய கமலம்.
இ. சிகரக் குன்றைப் படியில் சிந்த...
குன்று = கிரெளஞ்சம்.
(குருகு பெயர் பெற்ற கன வடசிகரி பட்டுருவ வேல் தொட்ட)...வேடிச்சி காவலன் வகுப்பு