Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    41. பரிமள


    பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார்
    படையம படையென அந்திக் குங்கட் கடையாலே
    வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
    மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே
    அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா
    அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா
    திரிபுர தகனமு வந்திக் குஞ்சற் குருநாதா
    ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.



    - திருச்செந்தூர்

    பதம் பிரித்து உரை


    பரிமள களப சுகந்த சந்த தனம் மானார்
    படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே


    பரிமள = மணமுள்ள களப = கலவைகளினின்றும் சுகந்த= நறு மணம் வீசுகின்ற சந்த = அழகிய தனம் மானார்= கொங்கைகளை உடைய மாதர்களின் படை யம படை என = படைகளுள் யம படை என்று சொல்லும்படியான அந்திக்கும் = சந்திக்கும் கண் கடையாலே = கடைக் கண்ணாலும்.


    வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே
    மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே


    வரி அளி = கோடுள்ள வண்டுகளின் நிரை முரல் =வரிசை ஒலிக்கின்ற கொங்கு = வாசனை உள்ள கங்குல் = இருண்ட குழலாலே = குழலாலும் மறுகிடும்= மனக் கவலை கொண்டு மருளனை = அறிவு மயங்கும் என்னை இன்புற்று அன்புற்று = இன்பத்துடனும் அன்புடனும். அருள்வாயே = அருள் புரிவாயாக.


    அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா
    அலை குமு குமு என வெம்ப கண்டித்து எறி வேலா


    அரி = திருமாலின் திரு மருக = திரு மருகனே கடம்பத் தொங்கல் = கடம்பு மாலை அணிந்த திரு மார்பா =அழகிய மார்பனே அலை குமு குமு என = (கடல்) அலைகள் குமு குமு என்று வெம்ப = கொதிப்பு கொள்ள கண்டித்து = அதைக் கண்டித்து எறி வேலா =எறிந்த வேலாயுதனே.


    திரி புரம் தகனரும் வந்திக்கும் சற் குரு நாதா
    ஜெய ஜெய ஹர ஹர செந்தில் கந்த பெருமாளே.


    திரி புரம் தகனரும் = முப்புரங்களை எரித்த சிவ பெருமானும். வந்திக்கும் = வணங்கும் சற் குரு நாதா = சற் குரு நாதனே.
    செய செய ஹர ஹர = வெற்றித் தலைவனே செந்தில் கந்தப் பெருமாளே = திருச் செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    படை யமபடை....
    மன்மதனின் படைகள் மாதர்கள் ஆவர்.
Working...
X