40. படர்புவி
படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுலாவு மால கத்தைத விர்ந்திடாதோ
அடல்பொருத பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்த்ர ணொந்துவீழ
உடல்தடியு மாழி தாவவெ னம்புய
மலர்கள் தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்
குதவிய கேசர் பால இந்திரன்
மகளை மண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே.
- திருச்செந்தூர்
[div5]விளக்கக் குறிப்புகள்
அ. அதி பெல கடோர மாச லந்தரன் நொந்து வீழ.....
மஹாவிஷ்னுவின் கையில் இருந்த சக்கராயுதம் தேய்ந்து போனபோது, ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை. ( ஸ்தல திருப்புகழ் பாடல் எருவாய் கருவாய் – 274 )
நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி, யவன்கொணர்ந் திழிச்சங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.- திருநாவுக்கரசர் தேவாரம்
ஆ. மடல் பரணி கோவை யார் கலம்பகம் முதல்.....
(வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணில் அழியாதே)...திருப்புகழ் (வஞ்சகலோப) [div5]

சுருக்க உரை
இந்த உலகில் மிகவும் வஞ்சனை உள்ள உலோபியர்களிடம் சென்று பொருள் பெற வேண்டி, அவர்களைச் சூரியனே என்று வியந்து உரைத்தும், குறையில்லாத உயரிய நூல்களையும், மற்ற சங்க நூல்களையும், திருக்குறளையும், கோடிக் கணக்காண பிரபந்த வகைகளையும் பாடித், தம்மைப் ஆசு கவி, மதுர கவி, சண்டவாயு என்றெல்லாம் பட்டப் பெயர்களைச் சூடிக் கொண்டு, கொடி, மேள, தாளம் முதலிய ஆடம்பரங்களுடன் உலவி வரும் அகங்காரத்தை நான் தவிர்ப்பேனாக.
சலந்தராசுரனை அழித்த சக்கரத்தைத் தனக்கு அளிக்குமாறு கேட்ட திருமாலுக்கு அங்ஙனமே தந்து உதவிய மகா தேவனுக்குக் குழந்தையே. இந்திரன் மகளான தேவசேனையை மணந்து, திருச்செந்தூரில் அடியேனை ஆள வந்தருளும் தம்பிரானே. என் அகந்தை என்னை விட்டு அகல அருள்புரிவாயாக.