39.பஞ்ச பாதக
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக
பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
பண்பி லாதொறு பகடது முதுகினில் யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
அன்பி னாலுன தடிபுக ழடிமையெ னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்தி மோகர மயிலினி லியலுடன் வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
வந்த தூயவெண் முறுவலு மிருகுழை யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய
குன்ற வாணர்த மடமகள் தடமுலை
மந்த ராசல மிசைதுயி லழகிய மணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து
திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி
தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
செநதில் மாநக ரினிதுறை யமரர்கள் பெருமாளே.
- திருச்செந்தூர்

சுருக்க உரை
பஞ்ச மா பாதகமும் குடிகொண்ட மாதிரி பயங்கரமான பற்களும், நெருப்புப் போன்ற கண்களும், குரங்கு போன்ற முகமும், முத்தலைச் சூலமும், பாசக் கயிறும் கொண்டு, எருமையின் மீது வரும் யமன், நான் அஞ்சும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில், உன்னையே நான் புகலிடமாகக் கொண்டு, உனது திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரில், நீ, அன்புடன் மயில் மீது ஏறி வரவேண்டும்.
மேகம் போன்ற கரிய கூந்தலும், இனிய பேச்சும், நிலவு போல் வெளுத்த பற்களும், இரண்டு குழைகளும், நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாய், வள்ளி மலைக் குன்றில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த தனங்களின் மேல் உறையும் அழகிய கணவனே. பல திசைகளிலும் போர் செய்து, சிவபெருமானுடைய கோயில்களையும் தொழுது, உயர்ந்த மேரு மலையின் மேல் செண்டை எறிந்த அரசருக்கு அரசே. தொண்டர்கள் வழி வழி அடிமையாக இருந்து, முத்தி பெற அருளிய திருச்செந்தூர் மாநகரில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. யமன் வரும் சமயத்தில் மயில் மீது வரவேண்டும்.

விளக்கக் குறிப்புகள்
அ. செண்டு மோதின ரரசரு ளதிபதி....
செண்டு = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவி.
முருகன் உக்கிர குமாரனாய் அரசாண்ட போது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக் குறிக்கும்.
(கனகந்திரன் கின்றபெ ருங்கிரி
தனின்வந்துத கன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே)....திருப்புகழ் (கனகந்திரள்).