Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    35.தோலொடு


    தோலொடு மூடிய கூரையை நம்பிப்
    பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
    சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான
    தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
    கோவையு லாமடல் கூறிய ழுந்திக்
    தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் கலமாருங்
    காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
    கோளனை மானமி லாவழி நெஞ்சக்
    காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக்
    காரண காரிய வோகப்ர பஞ்சச்
    சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
    காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் றருளாதோ
    பாலன மீதும னான்முக செம்பொற்
    பாலனை மோதப ராதன பண்டப்
    பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப்
    பாவியி ராவண னார்தலை சிந்திச்
    சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
    பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் கினியோனே
    சீலமு லாவிய நாரதர் வந்துற்
    றீதவள் வாழ்புன மாமென முந்தித்
    தேமொழி பாளித கோமள இன்பக் கிரிதோய்வாய்
    சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித்
    தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
    சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே
    .


    - திருச்செந்தூர்


    [hd6]பதம் பிரித்து பதவுரை


    தோலோடு மூடிய கூரையை நம்பி
    பாவையர் தோதக லீலை நிரம்பி
    சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி புதிதான


    தோலொடு மூடிய = தோலால் மூடப்பட்ட கூரையை நம்பி =கூரை போன்ற உடலை நம்பி பாவையர் =மாதர்களுடைய தோதக லீலை நிரம்பி = வஞ்சக விளையாட்டுகள் நிரம்புவதால் சூழ் = (அவர்களுக்கு) வேண்டிய பொருள் தேடிட = பொருளைத் தேடுவதற்காக ஓடி வருந்தி = ஓடியும் வருந்தியும் புதிதான = புது விதமான.


    தூது ஒடு நான்மணிமாலை ப்ரபந்த
    கோவை உலா மடல் கூறி அழுந்தி
    தோம் உறு காளையர் வாசல் புக்கு அல(a)மரும்


    தூதொடு = தூது மற்றும் நான் மணி மாலை ப்ரபந்த(ம்) கோவை உலா மடல் = இவ்விதமான (நூல் வகைகளை) கூறி= பாடி அழுந்தி = (அதிலேயே) ஈடுபட்டு தோம் உறு = குற்றம் உள்ள காளையர் வாசல் தோறும் = மக்களுடைய வாசல் தோறும் புக்கு = புகுந்து அலமரும் = வருந்துகின்ற.


    காலனை வீணனை நீதி கொடும் பொய்
    கோளனை மானம் இலா வழி நெஞ்ச
    காதக(ன்) லோப(ன்) வ்ருதாவனை நிந்தை புலையேனை


    காலனை = கால்களை உடையவனான வீணனை =பயனற்றவனை நீதி கெடும் பொய்க் கோளனை = நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை மானம் இல்லா = மானம் இல்லாது அழிந்து வழி நெஞ்சக் கதக(னை) = ஒடுங்கும் நெஞ்சம் உடையவனை லோப வ்ருதாவனை = (பேராசை)கொண்ட லோப குணம் படைத்த பயனற்றவனை நிந்தை =நிந்திக்கப்படும். புலையோனை = கீழ் மகனை


    காரண காரியவோக ப்ரபஞ்ச
    சோகம் எ(ல்)லாம் அற வாழ்வுற நம்பி
    காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ


    காரண காரியவோக = காரணம், காரியம் இவை தொடர்புடன் வரும் ப்ரபஞ்ச = இந்த உலக வாழ்வில் சோகம் எல்லாம் அற = துன்பங்கள் எல்லாம் நீங்கவும் வாழ்வுற = நல் வாழ்வு சேரவும் நம்பி = விரும்பி காசு அறு =குற்றமற்ற வாரி = செல்வமான. மெய்ஞ் ஞானதவம் =மெய்ஞ்ஞான தவ நிலையை சற்று அருளாதோ = கொஞ்சம் எனக்கு அருளலாகாதோ?


    பால் அ(ன்)னம் மீது மன் நான் முக செம் பொன்
    பாலனை மோது அபராதன பண்டு அ
    பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி


    பால் அன்னம் மீது = பால் போல் வெள்ளை நிறமுள்ள அன்னத்தின் மீது மன் = வீற்றிருக்கும் நான் முக = நான்கு முகங்களைக் கொண்ட செம் பொன் =செம் பொன் நிறம் கொண்ட பாலனை = (படைத்தல் தொழில் செய்யும்)பாலகனாகிய பிரமனை மோது அபராதன = மோதித் தண்டனைவிதித்தவனே பண்டு அப் பாரிய = முன்பு அந்தப் பெரிய மாருதி = அனுமனின் தோள் மிசை = தோளின் மேல்கொண்டு உற்று அமராடி = வீற்றிருந்து போர் செய்து.


    பாவி இராவணனார் தலை சிந்தி
    சீரிய வீடணர் வாழ்வு உற மன்றல்
    பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே


    பாவி இராவணனார் = பாவியாகிய இராவணனுடைய தலை சிந்தி = தலைகள் சிதறவும் சீரிய வீடணர் = உத்தமராகிய விபீடணன் வாழ்வுற = நல் வாழ்வு வாழவும் (வைத்து) மன்றல் பாவையர் = மணந்த பாவையாகிய சீதையின் தோள் புணர் = தோளைச் சேர்ந்த மாதுலர் = மாமனாகிய திருமாலின்சிந்தைக்கு இனியோனே = சிந்தைக்கு இனியவனே.


    சீலம் உலாவிய நாரதர் வந்து உற்று
    ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி
    தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய்


    சீலம் உலாவிய நாரதர் = நல்லுணர்வு உள்ள நாரத முனிவர். வந்து உற்று = வந்து ஈது அவள் வாழ் புனமாம் என = இது அந்த வள்ளி வாழ்கின்ற தினைப் புனம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முந்தி = (உடனே நீ) முடுகிச் சென்று தே மொழி =தேன் போலும் சொற்களை உடையவளும் பாளித = பச்சைக் கற்பூரக் கலவை அணிந்த கோமள = அழகிய இன்பக் கிரி =இன்பகரமான கொங்கைகளில் தோய்வாய் = தோய்ந்தவனே.


    சேலொடு வாளை வரால்கள் கிளம்பி
    தாறு கொள் பூகம் அளாவிய இன்ப
    சீரலைவாய் நகர் மேவிய கந்த பெருமாளே.


    சேலொடு = சேல் மீன்களுடன் வாளை வரால்கள் = வாளை, வரால் முதலிய மீன்களும் கிளம்பி = கிளம்பித் துள்ளிப் பாய்ந்து. தாறு கொள் = குலைவிட்டுள்ள பூகம் = கமுகு மரத்தில் அளாவிய இன்ப = கலக்கும் இன்பகரமானசீரலைவாய் நகர் = திருச் செந்தூரில் மேவிய கந்தப் பெருமாளே = வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.[/div6]


Working...
X