32.தரிக்குங்கலை
தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர
தவிக் குங்கொடி மதனேவிற்
றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு
தமிழ்த் தென்றலி னுடனேநின்
றெரிக் கும்பிறை யெனப் புண்படு
மெனப் புன்கவி சிலபாடி
இருக் குஞ்சிலர் திருச் செந்திலை
யுரைத் துய்ந்திட அறியாரே
அரிக் குஞ்சதுர் மறைக் கும்பிர
மனுக் குந்தெரி வரிதான
அடிச் செஞ்சடை முடிக் கொண்டிடு
மரற் கும்புரி தவபாரக்
கிரிக் கும்பநன் முநிக் குங்க்ருபை
வரிக் குங்குரு பரவாழ்வே
கிளைக் குந்திற லரக் கன்கிளை
கெடக் கன்றிய பெருமாளே.
- திருச்செந்தூர்
தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர
தவிக் குங்கொடி மதனேவிற்
றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு
தமிழ்த் தென்றலி னுடனேநின்
றெரிக் கும்பிறை யெனப் புண்படு
மெனப் புன்கவி சிலபாடி
இருக் குஞ்சிலர் திருச் செந்திலை
யுரைத் துய்ந்திட அறியாரே
அரிக் குஞ்சதுர் மறைக் கும்பிர
மனுக் குந்தெரி வரிதான
அடிச் செஞ்சடை முடிக் கொண்டிடு
மரற் கும்புரி தவபாரக்
கிரிக் கும்பநன் முநிக் குங்க்ருபை
வரிக் குங்குரு பரவாழ்வே
கிளைக் குந்திற லரக் கன்கிளை
கெடக் கன்றிய பெருமாளே.
- திருச்செந்தூர்
சுருக்க உரை
அணிந்துள்ள ஆடை நெகிழ்ந்து, மனம் வேதனைப் படும் இந்தப்பெண் மன்மதனின் பாணங்களால் தாக்கப்பட்டுத் தனிமையில் திகைத்து நிற்க, தென்றற் காற்றும், பிறை நிலவும் அவளை எரித்து மனதைப் புண்படுத்தும் என்று புன் கவிகளை அகப் பொருள் துறையில் பொய்ம்மையான மக்களிடம் பாடி நிற்பர். இவர்கள் திருச்செந்தூரைப் புகழ்ந்து பாடிப் பிழைக்க மாட்டார்களோ. இது என்ன பாவம்.
திருமாலும், பிரமனும் காண முடியாத அடியைக் கொண்ட சிவபெருமானுக்கும், பொதிய மலையில் வாழும் கும்ப முனிவராகிய அகத்தியருக்கும் அருள் பாலித்த குரு நாதரே, வலிமை வாய்ந்த சூரனும் அவன் சுற்றமும் அழியக் கோபித்த பெருமாளே, செந்திலை உரைத்து உய்ந்திட அருள்வாயாக.