30.தண்டையணி
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.
- திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண் சிலம்புடன் கொஞ்சவே நின்
தண்டை அணி = தண்டை என்கின்ற அணிகலன்வெண்டையம் = (வீரர்கள் அணியும்) வெண்டையம் என்றகாலணி. கிண்கிணி = கிண்கிணி (இடையில் கட்டும் ஆபரணம்) சதங்கையும் = சதங்கை ஆகிய அணிகலன்களுடன் தண் சிலம்புடன் = அருள் கழல் சிலம்பு(இவைகள் எல்லாம்) கொஞ்சவே = கொஞ்சி ஒலிக்க.
தந்தையினை முன் பரிந்தின் பவுரி கொண்டு நல்
சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல
தந்தையினை = தந்தையாகிய சிவபெருமானை முன் பரிந்தின்= முன்னர் அன்புடன் பவுரி கொண்டு = வலம் வந்து நல் =நல்ல சந்தொடம்= மகிழ்ச்சியுடன் அணைந்து நின்ற =அணைந்து நின்ற அன்பு போல = அன்பு போலவே. ( சந்தொடம் - சந்தோஷம்)
கண்டு உற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும்
கண்டு உற = (இப்போது நான்) உன்னைக் கண்டு மனம் ஒருமைப்பட கடம்புடன் = கடப்ப மாலையோடு சந்த மகுடங்ளும் = அழகிய மணி மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் = தாமரை மலர் போன்ற செம் கையும் = சிவந்த கைகளும் சிந்து வேலும் = கொடியும் வேலும்.
கண்களு(ம்) முகங்களும் சந்திர நிறங்களும்
கண் குளிர என் தன் முன் சந்தியாவோ?
கண்களும் = பன்னிரு கண்களும் முகங்களும் = ஆறு திரு முகங்களும் சந்திர நிறங்களும் = நிலவொளிகளும் கண் குளிர= (என்) கண்கள் குளிரும்படி என்றன் முன் சந்தியாவோ = என் முன் வந்து தோன்றாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ வெம் களம் கொண்ட போது
புண்டரிகர் = தாமரையான் (பிரமனது) அண்டமும் =உலகும் கொண்ட = மற்றுமுள்ள பகிரண்டமும் = வெளி அண்டங்கள் யாவும் பொங்கி எழ = (மகிழ்ச்சியால்) பொங்கி எழ வெம் களம் கொண்ட போது= போர்க் களத்தில் எழுந்தருளிய போது.
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர
பொன் கிரி என = பொன் மலை என்னும்படி சிறந்து =சிறந்து எங்கினும் வளர்ந்து = எங்கும் நிறைந்து(விஸ்வரூபமெடுத்து) முன் = முன்னொருகாலத்தில்புண்டரிகர் தந்தையும் = பிரமனுடைய தந்தையாகிய திருமாலும் ( மூவுலகங்களை ஈரடியாலளந்ததும்) சிந்தை கூர= உள்ளம் மகிழ.
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என் தன் முன்
கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே
கொண்ட நடனம் பதம் = கொண்ட நடன பதங்கள்செந்திலிலும் = திருச் செந்தூரிலும் என்றன் முன் = என் முன்னே கொஞ்சி = கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே =நடனத்தைக் கொண்டன கந்த வேளே.
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்
கும்ப முநி கும்பிடும் தம்பிரானே.
கொங்கை குற மங்கையின் = குறப் பெண்ணாகிய வள்ளியின் சந்த மணம் உண்டிடும் = அழகிய மணத்தை நுகர்ந்து சுகிக்கப வரும் கும்ப முநி = குட முனியாகிய அகத்தியரால் கும்பிடும் = வணங்கப்படும் தம்பிரானே =தனிப்பெருந் தலைவரே.

சுருக்க உரை
தண்டையும், வெண்டையமும், கிண்கிணியும், சிலம்பும் ஒன்று பட்டு கொஞ்சி ஒலிக்க, உன் தந்தையாகிய சிவபெருமான் முன் வலம் வந்து அணைந்து நின்ற அன்பு போலவே இப்போது நான் உன்னைக் கண்டு மனம் ஒருமைப்பட, மணி முடிகளுடன், கொடியும் வேலும் பன்னிரு, கண்களும், ஆறு திருமுகங்களும் என் கண் முன் வந்து தோன்றாவோ?
எல்லா உலகங்களும், அண்டங்களும் மகிழ்ச்சியால் பொங்கி எழ, நீ போர்க்களத்தில் எழுந்தருளிய போது, திருமாலும், சிவனும் மகிழ்ச்சி கொள்ள, நீ கொண்ட நடன பாதங்களை என் முன்னே திருச் செந்தூரில் காண்பித்தவனே, கந்தனே, குற மங்கையின் அழகியமணத்தை நுகர்பவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே,என் முன்னே வரவேணும்.