Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    29.தண்டே


    தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
    தண்டார் மஞ்சுக் குழல்மானார்
    தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
    சம்பா வஞ்சொற் றடிநாயேன்
    மண்டா யந்தீ மென்கால் விண்டோய்
    வண்கா யம்பொய்க் குடில்வேறாய்
    வன்கா னம்போ யண்டா முன்பே
    வந்தே நின்பொற் கழல்தாராய்
    கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
    கொன்றாய் வென்றிக் குமரேசா
    கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
    குன்றா மன்றற் கிரியோனே
    கண்டா கும்பா லுண்டா யண்டார்
    கண்டா கந்தப் புயவேளே
    கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
    கந்தா செந்திற் பெருமாளே.



    - திருச்செந்தூர்






    சுருக்க உரை
    தேனைப் பருகும் வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த, கரு மேகம் போன்ற கூந்தலை உடைய விலை மாதர்கள் மீது மிக்க அன்பு கொண்டு, அவர்களுடன் பழகும் சம்பவங்களையே பேசும் அடி நாயேனாகிய நான், ஐம் பொறிகாளால் ஆகிய உடல் பொய்யானது என்பதை உணராமல், அவ்வுடல் உயிரினின்றும் பிரிந்து, சுடுகாட்டுக்குப் போகும் முன்னர், என் முன் வந்து உனது திருவடியைத் தந்தருள வேண்டும்.


    வலிமையான சூரனைக் கொன்ற வெற்றிக் குமரனே, வண்டுகள் பண்பாடும் வள்ளி மலைக்கு உரியவனே, மணம் வீசும் திருப் புயங்களை உடையவனே, கந்தனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் இறப்பதற்கு முன் எனக்கு உன் பொற் கழல் தாராய்.



    விளக்கக் குறிப்புகள்


    அ. சம்பாவம் = சமபவம். கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா = கம்பத்துக்குச் சமமான வலிமை பொருந்திய அழகிய தோள்களை உடைய வீரன்.

    ஆ. மன்றற் கிரியோனே...
    (வரை மன்றற் பைம்புனத் தாள் பதாம் புயம்
    வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன்)...பூதவேதாள வகுப்பு.
Working...
X